முகப்பு /செய்தி /விளையாட்டு / ரூ.16.25 கோடிக்கு வாங்கப்பட்ட சி.எஸ்.கே. வீரர் இங்கிலாந்திற்கு புறப்பட்டார்…

ரூ.16.25 கோடிக்கு வாங்கப்பட்ட சி.எஸ்.கே. வீரர் இங்கிலாந்திற்கு புறப்பட்டார்…

பென் ஸ்டோக்ஸ்

பென் ஸ்டோக்ஸ்

இவரை ஏலத்தில் எடுப்பதற்காக ஐபிஎல் அணிகள் கடுமையாக போட்டி போட்டன. இருப்பினும் சென்னை அணி நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு ரூ. 16.25 கோடிக்கு பென் ஸ்டோக்சை விலைக்கு வாங்கியது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ரூ. 16.25 கோடிக்கு வாங்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ், தேசிய அணியில் விளையாடுவதற்காக இங்கிலாந்து புறப்பட்டு சென்றுள்ளார். சென்னை அணியின் அடுத்த கேப்டனாக இவர் நியமிக்கப்படலாம் என்று பேசப்பட்ட நிலையில் இந்த சீசனில் அவர் சென்னை அணிக்காக 2 மேட்ச்சுகளில் மட்டுமே விளையாடியுள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் சர்வதேச தரம்  வாய்ந்த ஆல் ரவுண்டராகவும் பென் ஸ்டோக்ஸ் ஜொலித்து வருகிறார்.

இவரை ஏலத்தில் எடுப்பதற்காக ஐபிஎல் அணிகள் கடுமையாக போட்டி போட்டன. இருப்பினும் சென்னை அணி நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு ரூ. 16.25 கோடிக்கு பென் ஸ்டோக்சை விலைக்கு வாங்கியது. சென்னை அணியின் வெற்றியில் பென் ஸ்டோக்ஸ் முக்கிய பங்கு வகிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அவர் மொத்தமே 2 போட்டிகளில் மட்டுமே இந்த சீசனில் விளையாடியுள்ளார். ஒட்டு மொத்தமாக 15 ரன்கள் எடுத்த ஸ்டோக்ஸ் ஒரேயொரு ஓவர் மட்டும் வீசி எதிரணிக்கு 18 ரன்கள் கொடுத்தார்.

இதையும் படிங்க - ‘இந்திய அணியில் இடம்பெறுவது குறித்து அதிகம் யோசிக்கவில்லை’ – ரின்கு சிங் பேட்டி

top videos

    காயம் காரணமாக பென் ஸ்டோக்ஸ் சென்னை அணியில் அணியில் இடம்பெற்ற போதிலும் அவர் போட்டிகளில் விளையாடவில்லை. இருப்பினும் அவர் இடம்பெறாமலேயே சென்னை அணி இந்த தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ப்ளே ஆஃப் குவாலிஃபையர் ரவுண்டிற்குள் நுழைந்துள்ளது. இந்த நிலையில், அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டிகளில் பங்கேற்பதற்காக பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து புறப்பட்டு சென்றுள்ளார். அயர்லாந்து – இங்கிலாந்து மோதும் டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் 1 ஆம் தேதி தொடங்கவுள்ளது. மிக அதிக விலைக்கு எடுக்கப்பட்ட வீரர் 2 போட்டிகளில் விளையாடியதுடன் மட்டுமல்லாமல், முக்கியமான தருணத்தில் அணியை விட்டு செல்வது சி.எஸ்.கே.ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    First published:

    Tags: IPL, IPL 2023