முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 : ஒவ்வொரு டாட் பந்திற்கும் 500 மரக்கன்றுகளை நடும் பிசிசிஐ… ரசிகர்கள் வரவேற்பு…

IPL 2023 : ஒவ்வொரு டாட் பந்திற்கும் 500 மரக்கன்றுகளை நடும் பிசிசிஐ… ரசிகர்கள் வரவேற்பு…

பிசிசிஐ

பிசிசிஐ

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேரடியாக வரும் ஞாயிறு அன்று அகமதாபாத்தில் நடைபெற உள்ள இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், பிளே ஆப் சுற்றில் ஒவ்வொரு டாட் பாலுக்கும் 500 மரக்கன்றுகளை நடுவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு ரசிகர்கள் வரவேற்பும், பாராட்டும் தெரிவித்துள்ளனர். நேற்று சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே நடைபெற்ற பிளே ஆப் குவாலிஃபயர் முதல் போட்டியில், 84 டாட்பால்கள் வீசப்பட்டன. இதன் அடிப்படையில் பிசிசிஐ நாடு முழுவதும் 42 ஆயிரம் மரக்கன்றுகளை நட உள்ளது.

இது தொடர்பாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது- ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பிளே ஆப் போட்டிகளில் ஒவ்வொரு டாட் பாலுக்கும் 500 மரக்கன்றுகளை நட உள்ளோம். டாடா நிறுவனங்களுடன் இணைந்து இந்த நடவடிக்கையை நாங்கள் மேற்கொள்வதில் பெருமை அடைகிறோம். குவாலிஃபையர் முதல் போட்டியில் 84 டாட்பால்கள் வீசப்பட்டன. இதன் அடிப்படையில் குவாலிஃபயர் முதல் மேட்ச் 42 ஆயிரம் மரக்கன்றுகளை பெற்றுள்ளது. என்று கூறியுள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற குவாஃபையர் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 172 ரன்கள் எடுத்தது. 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியால் 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்த வெற்றியின் மூலமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேரடியாக வரும் ஞாயிறு அன்று அகமதாபாத்தில் நடைபெற உள்ள இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இதையும் படிங்க - IPL 2023 : ஹர்திக் பாண்ட்யாவை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய தோனி… கொண்டாடும் ரசிகர்கள்…

இன்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ள எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதிகின்றன. இதில் வெற்றி பெறும் அணி அடுத்ததாக நடைபெற உள்ள குவாலிஃபயர் 2 போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்ளும். தோல்வி அடையும் அணி தொடரில் இருந்து வெளியேறும்.

First published:

Tags: IPL, IPL 2023