முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 : ‘டெல்லி அணியின் கேப்டனாக அக்சர் படேலை நியமிக்க வேண்டும்’ – சுனில் கவாஸ்கர் வலியுறுத்தல்

IPL 2023 : ‘டெல்லி அணியின் கேப்டனாக அக்சர் படேலை நியமிக்க வேண்டும்’ – சுனில் கவாஸ்கர் வலியுறுத்தல்

அக்சர் படேல்

அக்சர் படேல்

கடைசியாக நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டி உள்பட 2 போட்டிகளில் டெல்லி அணி தொடர்ச்சியாக வெற்றி பெற்று வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளது

  • Last Updated :
  • Tamil Nadu, India

டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக அக்சர் படேல் நியமிக்கப்பட வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார். வார்னர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி பாயின்ட்ஸ் டேபிளில் கடைசி இடத்தை பிடித்திருக்கும் நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். டெல்லி கேபிடல்ஸ் அணி நப்பு சீசனில் மொத்தம் 7 போட்டிகளில் விளையாடி மொத்தமே 2 போட்டிகளில் வெற்றி பெற்று பாயின்ட்ஸ் டேபிளில் கடைசி இடத்தை பிடித்துள்ளது. நெட் ரன் ரேட்டும் மோசமாக இருப்பதால் அடுத்து வரும் அனைத்து போட்டிகளில் வெற்றிபெற்றால் மட்டுமே ப்ளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைக்க முடியும்.

இதற்கிடையே கடைசியாக நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டி உள்பட 2 போட்டிகளில் டெல்லி அணி தொடர்ச்சியாக வெற்றி பெற்று வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளது. இந்நிலையில் டெல்லி அணியின் கேப்டனாக வார்னருக்கு பதிலாக அக்சர் படேலை நியமனம் செய்ய வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-

டெல்லி அணியின் கேப்டனாக அக்சர் படேலை நியமிக்க வேண்டும். அவர் நேர்மையான விளையாட்டு வீரர். தலைமைத்துவ பன்பு அவரிடம் இருக்கிறது. அவர் சிறப்பாக செயல்படும்போது, டெல்லி அணிக்கு நிறைய பலன்கள் கிடைக்கும். நீண்ட கால அடிப்படையில் டெல்லி அணியின் நிர்வாகம் இந்த முடிவை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். டெல்லி அணிக்கு எதிரான போட்டியின்போது சன்ரைசர்ஸ் அணியின் பவுலர் புவனேஸ்வர் குமார் 4 ஓவர்களை வீசி 11 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களை எடுத்தது. அடுத்து விளையாடிய சன்ரைசர்ஸ் அணியால் 137 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. பாயின்ட்ஸ் டேபிளில் டெல்லி அணி 10 ஆவது இடத்திலும், சன்ரைசர்ஸ் அணி 9 ஆவது இடத்திலும் உள்ளன.

First published:

Tags: IPL, IPL 2023