முகப்பு /செய்தி /விளையாட்டு / IPl 2023 : பென் ஸ்டோக்ஸ் பந்து வீச மாட்டார் என தகவல்… சென்னை அணிக்கு பின்னடைவு

IPl 2023 : பென் ஸ்டோக்ஸ் பந்து வீச மாட்டார் என தகவல்… சென்னை அணிக்கு பின்னடைவு

பென் ஸ்டோக்ஸ்

பென் ஸ்டோக்ஸ்

சமீபத்தில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் பென் ஸ்டோகசை ரூ.16.50 கோடிக்கு சென்னை அணி நிர்வாகம் ஏலத்தில் எடுத்தது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் முதல் சில போட்டிகளில் பந்து வீச மாட்டார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் சென்னை அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐபிஎல் தொடர் வரும் வெள்ளியன்று கோலாகலமாக தொடங்கவுள்ளது. அன்றைய தினம் அகமதாபாத்தில் நடைபெறவுள்ள அறிமுக போட்டியில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொள்கிறது.

தோனி தலைமையிலான சென்னை அணி இந்த முறை கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். சென்னை அணியை பொருத்தவரையில் தோனி, ரவிந்திர ஜடேஜா, பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி போன்ற முக்கிய ஆட்டக்காரர்கள் இருப்பதால் எதிர்பார்ப்பு அதிகம் காணப்படுகிறது. இந்த நிலையில் அதிர்ச்சியளிக்கும் விதமாக முதல் சில போட்டிகளில் பென் ஸ்டோக்ஸ் பந்து வீச மாட்டார் என்று தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன. அவரது காலில் காயம் ஏற்பட்டிருப்பதால் குணம் அடைய சில நாட்கள் தேவைப்படுகிறது. இதனால் அவர் பேட்டிங் மட்டுமே செய்வார் என்று பயிற்சியாளர் மைக் ஹசி கூறியுள்ளார். சமீபத்தில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் பென் ஸ்டோகசை ரூ.16.50 கோடிக்கு  சென்னை அணி நிர்வாகம் ஏலத்தில் எடுத்தது.

top videos

    சென்னை அணியில் தோனிக்கு பின்னர் கேப்டன் பொறுப்பு பென் ஸ்டோக்ஸிற்கு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2023 சீசனில் சென்னை அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் – எம்.எஸ். தோனி, ரவீந்திர ஜடேஜா, டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அம்பதி ராயுடு, சுப்ரான்ஷு சேனாபதி, மொயின் அலி, ஷிவம் துபே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், டுவைன் பிரிட்டோரியஸ், மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, முகேஷ் சிம்மத் சௌத்ரி, முகேஷ் சிம்மத் சௌத்ரி, , மகேஷ் தீக்ஷனா, அஜிங்க்யா ரஹானே, பென் ஸ்டோக்ஸ், ஷேக் ரஷீத், நிஷாந்த் சிந்து, அஜய் மண்டல், பகத் வர்மா, சிசண்டா மகலா

    First published:

    Tags: IPL, IPL 2023