முகப்பு /செய்தி /விளையாட்டு / பிரமாண்டமாக தொடங்கியது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா.. சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங்..!

பிரமாண்டமாக தொடங்கியது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா.. சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங்..!

பாண்டிய - தோனி

பாண்டிய - தோனி

IPL 2023 Match:1 CSK vs GT | 16வது ஐபிஎல் தொடர் கலை நிகழ்ச்சிகளுடன் மிக பிரமாண்டமாக தொடங்கியது.

  • Last Updated :
  • Ahmadabad, India

16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று அகமாதபாத் நரேந்திர மோடி மைதானத்தில் கலை நிகழ்ச்சிகளுடன் கோலகலமாக தொடங்கியது. நடிகைகள் ராஷ்மிகா மந்தனா மற்றும் தமன்னாவின் நடன நிகழ்ச்சிகளுடன் தொடக்க விழா பிரமாண்டமாக நடைபெற்றது. இதனையடுத்து மேடையில் நடந்த நிகழ்ச்சியில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து இரு அணிகளின் கேப்டன்கள் வண்டியில் ஊர்வலமாக வந்து ரசிகர்களை குஷிப்படுத்தினர்.

பின்னர் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹார்திக் பாண்டிய முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது.

சென்னை ஆடும் லெவன் வீரர்கள்:

ருதுராஜ், கான்வே, பென் ஸ்டோக்ஸ், அம்பத்தி ராயுடு, மொயீன் அலி , ஜடேஜா, எம்எஸ் தோனி (கே) சிவம்  துபே, தீபக் சாஹர், சான்ட்னர் , ஹங்கர்கேகர்

சென்னை அணி முதலில் டாஸ் போட்ட பிறகு  4 வெளிநாட்டு வீரர்களை தேர்வு செய்த்தால்.இம்பேக்ட் வீரர்களில் வெளிநாட்டு வீரர்களை பயன்படுத்த முடியாது. இதனால் இந்திய வீரர் ஒருவரை மட்டும் சென்னை அணி பயன்ப்படுத்த முடியும்.

சென்னை அணி அறிவித்துள்ள மாற்று வீரர்கள்: - ரஹானே, தேஷ்பாண்டே, சேனாபதி, ரஷீத் மற்றும் நிஷாந்த் சிந்து.

குஜராத் ஆடும் லெவன் வீரர்கள்:

கில், சாஹா, வில்லியம்சன், பாண்டியா (கே), விஜய் சங்கர், தெவாடியா, ரஷித், ஷமி, ஜோஷ் லிட்டில், யாஷ் தயாள், அல்ஜாரி ஜோசப்

குஜராத் அணி மாற்று வீரர் பட்டியல்:

top videos

    சுதர்சன், ஜெயந்த், மோஹித், மனோகர் மற்றும் கே.எஸ்.பரத்

    First published:

    Tags: CSK, Gujarat Titans, IPL 2023