முகப்பு /செய்தி /விளையாட்டு / தவான் இல்லாத பஞ்சாப்... சொந்த மைதானத்தில் மும்பை- எந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு ?

தவான் இல்லாத பஞ்சாப்... சொந்த மைதானத்தில் மும்பை- எந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு ?

ராகுல் - பாண்டியா

ராகுல் - பாண்டியா

IPL 2023 | பஞ்சாப் அணியை பொறுத்தவரை கேப்டன் ஷிகர் தவன், தோள்பட்டை காரணமாக இன்றைய போட்டியிலும் விளையாடுவது சந்தேகம் என கூறப்படுகிறது

  • Last Updated :
  • Lucknow, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நடப்புச் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் இன்று மோதவுள்ளது.

ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியில் லக்னோ - குஜராத் அணிகள் மோதவுள்ளன. லக்னோ அணி இதுவரை ஆடிய 6 போட்டிகளில் நான்கில் வெற்றிபெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில், இன்றைய போட்டியில் வெற்றிபெற்று மீண்டும் முதலிடம் பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது. அதேவேளையில், ஆரம்பத்தில் ஆதிக்கம் செலுத்திய குஜராத் அணி, 3 மற்றும் 5-வது போட்டியில் தோல்வியை சந்தித்தது. எனவே, மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப முனைப்பு காட்டி வருகிறது.

இதையும் படிங்க: "மதுரை சித்திரை திருவிழாவுக்கு வாங்க...” - தோனிக்கு அழைப்பு விடுத்த ரசிகர்கள்..!

இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் இரண்டாவது போட்டி நடைபெறவுள்ளது. இதில், மும்பை இந்தியன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளும் தலா 3 வெற்றியுடன் முறையே 6 மற்றும் 7-வது இடத்தில் உள்ளன. மும்பை அணி, கடைசியாக விளையாடிய 3 போட்டிகளிலும் வாகை சூடி, ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது.

இதையும் படிங்க: தம்பி? மாமா? அத்தை? நடராஜன் குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் தோனி” - இணையத்தில் வைரலாகும் தோனி வீடியோ

top videos

    இந்நிலையில், சொந்த மைதானத்தில் களம் காணுவது அந்த அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. பஞ்சாப் அணியை பொறுத்தவரை கேப்டன் ஷிகர் தவன், தோள்பட்டை காரணமாக கடந்த இரு போட்டிகளில் விளையாடவில்லை. இன்றைய போட்டியில் களமிறங்குவது சந்தேகமே. இது அந்த அணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

    First published:

    Tags: IPL 2023