முகப்பு /செய்தி /விளையாட்டு / ”வாழ்வா சாவா”ஆட்டத்தில் மோதும் பெங்களூரு - ராஜஸ்தான் அணிகள்... முதலிடத்திற்கு முன்னேறுமா சென்னை!

”வாழ்வா சாவா”ஆட்டத்தில் மோதும் பெங்களூரு - ராஜஸ்தான் அணிகள்... முதலிடத்திற்கு முன்னேறுமா சென்னை!

பெங்களூரு -ராஜஸ்தான் அணிகள் மோதல்

பெங்களூரு -ராஜஸ்தான் அணிகள் மோதல்

RCB vs RR | ஐபிஎல் தொடரில் இன்று 2 போட்டிகள் நடைபெறவுள்ளது

  • Last Updated :
  • Chennai, India

ஐபிஎல் தொடர் பரபரப்பன கட்டத்தை எட்டியுள்ளது.பிளே ஆப் வாய்ப்புக்காக அணிகள் மல்லுக்கட்டி வரும் நிலையில் பகல் 3.30 மணிக்கு நடைபெற உள்ள 60-ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான்-பெங்களூரு அணிகள் மோதுகின்றன. ஜெய்ப்பூரில் நடைபெறும் இந்தப் போட்டியில் வெல்லும் அணி பிளே ஆஃப் ரேசில் தொடந்து நீடிக்கும் என்பதால் இரு அணிகளுக்குமே இந்தப் போட்டி முக்கியமானதாக உள்ளது. இந்த போட்டியில் எந்த அணி தோல்வியை தழுவினாலும் அந்த அணிக்கு பிளே ஆப் வாய்ப்பு கேள்வி குறியாகவே இருக்கும்.

இன்று நடைபெற இருக்கும் இரண்டாவது லீக் போட்டியில், சென்னை-கொல்கத்தா அணிகள் சேப்பாக்கத்தில் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும்பட்சத்தில் சென்னை அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிப்பதுடன் பிளே ஆஃப் வாய்ப்பையும் உறுதி செய்யும் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

எனினும் சென்னையை முன்னேற விடாமல் தடுக்க கொல்கத்தா அணி போராடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய போட்டிக்கு அடுத்தபடியாக சென்னை அணி டெல்லியுடன் வரும் 20ஆம் தேதி லீக் போட்டியில் மோத இருக்கிறது..

top videos
    First published:

    Tags: CSK, IPL 2023, KKR, Rajasthan Royals, RCB