2023 ஐபிஎல் திருவிழா தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. குஜராத் மற்றும் மும்பை அணிகள் மோதும் இரண்டாவது தகுதி சுற்று போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் சென்னை அணியுடன் மோதுகிறது. போட்டி உச்சகட்டத்தை எட்டியுள்ளதால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் தளத்தில் புதிய பாய்ச்சலாக இந்தாண்டு ஐபிஎல் தொடரின் அதிகாரப்பூர்வ ஸ்ட்ரீமிங் பார்ட்னரான ஜியோ சினிமா, அனைத்து போட்டிகளையும் இலவசமாக ஸ்ட்ரீமிங் செய்கிறது. முதல் ஆண்டியேலே ஜியோ சினிமாவுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
இதனால் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் தளத்தில் புதிய சாதனைகளை படைத்து வருகிறது. தொடரின் முதல் 7 வாரத்தில் மட்டும் சுமார் 1,500 கோடி பார்வைகள் ஜியோ சினிமாவில் பதிவாகியுள்ளன. இது புதிய உலக சாதனையாகும். குறிப்பாக சென்னை அணி விளையாடும் போட்டிகளில் உச்சபட்ச அளவில் பார்வையாளர்கள் எண்ணிக்கை பதிவாகி வருகிறது.
மே 24இல் நடைபெற்ற குஜராத் மற்றும் சென்னை அணிகள் மோதிய முதல் தகுதி சுற்று போட்டியை சுமார் 2.5 கோடி பார்வையாளர்கள் கண்டுகளித்துள்ளனர். இது புதிய உலக சாதனையாகும். கடந்த ஐபிஎல் போட்டிகளில் 1.8 கோடி பார்வையாளர்கள் தான் உச்சபட்ச எண்ணிக்கையாக இருந்தது. ஆனால், இம்முறை 13 போட்டிகளுக்கு மேல் 1.8 கோடி பார்வையாளர்கள் என்ற எண்ணிக்கையை கடந்துள்ளது. சிஎஸ்கே அணி விளையாடிய 3 போட்டிகளில் 2 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்கள் எண்ணிக்கை பதிவாகியுள்ளது.
மேலும், இதுவரை நடைபெற்ற எந்த நிகழ்வுகளுக்கும் இல்லாத அளவிற்கு அதிக அளவிலான விளம்பரதாரர்கள் மற்றும் ஸ்பான்சர்களை ஜியோ சினிமா இந்தாண்டு ஒப்பந்தம் செய்துள்ளது. ஜியோ சினிமாவில் ஒப்பந்தம் பதிவு செய்த விளம்பரதாரர்களின் எண்ணிக்கையும் ஒரு புதிய சாதனையாகும். டிஜிட்டல் தளத்தில் விளம்பர வருவாயும் கடந்த ஆண்டை விட கணிசமாக அதிகரித்துள்ளது. போஜ்புரி, பஞ்சாபி, மராத்தி மற்றும் குஜராத்தி உள்ளிட்ட பிராந்திய மொழியில் சேவை வழங்குகிறது.
மல்டி-கேம், 4K மற்றும் ஹைப் மோட் போன்ற டிஜிட்டல்-ஒன்லி அம்சங்களை வழங்கும் ஜியோ சினிமா, போட்டியின் பிரத்தியேக கண்டென்டுகள், விராட் கோலி, ஹார்திக் பாண்டியா, ரஷித் கான், டேவிட் மில்லர், பாப் டு பிளெசிஸ் உள்ளிட்ட முன்னணி வீரர்களின் பேட்டிகளை அணிகளுடன் மேற்கொண்ட ஒப்பந்தம் மூலமாக ரசிகர்களுக்கு வழங்குகிறது.
இதையும் படிங்க: சேப்பாக்கம் மைதான பணியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தல தோனி...
2023 ஐபிஎல் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் தளமான ஜியோ சினிமா டிரீம் 11, ஜியோ மார்ட், போன்பே, டியாகோ இவி, அப்பி பிஸ், இடி மனி, கேஸ்ட்ரால், டிவிஎஸ், ஓரியோ, பிங்கோ, ஸ்டிங், ஏஜியோ, ஹேயர், ரூபே, லூயிஸ் பிலிபே ஜீன்ஸ், அமேசான், ரேபிடோ, அல்ட்ரா டெக் சிமென்ட், பூமா, கம்லா பசந்த், கிங்க்பிஷர் பவர் சோடா, ஜிந்தால் பேந்தர் டிஎம்டி ரேபார், சவுதி டூரிசம், ஸ்பாடிபை மற்றும் AMFI ஆகியோரை ஸ்பான்சர்களாக கொண்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.