16-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவுக்கு ரசிகர்கள் தயாராகிவிட்டனர். ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களும் தங்களது அணிக்கு திரும்பி தற்போது பயிற்சியை தொடங்கிவிட்டனர். கிரிக்கெட் ரசிகர்களால் ‘தல’ என அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை வந்தடைந்தார். பயிற்சியில் தோனி பறக்கவிடும் சிக்ஸர்கள் தொடர்பான வீடியோவை சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்டது. அதேபோல் தோனி இப்போது செம ஃபிட்டாக உள்ளார் இந்த போட்டோவும் இணையத்தில் வெளியாகி ஃபயரானது.
இந்நிலையில் சிஎஸ்கே ரசிகர்களை உசுப்பேத்தும் விதமாக ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த். 2023 ஐபிஎல் டைட்டிலை சிஎஸ்கே வெல்ல சான்ஸே இல்லை என அதிரடியாக கூறியுள்ளார். சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் தான் டைட்டிலை தட்டிச்செல்லும். என்னுடைய முழு ஆதரவும் ராஜஸ்தான் அணிக்குதான். புதிய சில அணிகள் கோப்பையை வென்றால் வேடிக்கையாகதான் இருக்கும் என்றார்.
2023 ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி வென்றாலும் நன்றாக இருக்கும். விராட் கோலி இந்திய கிரிக்கெட் அணிக்காக நிறைய செய்திருக்கிறார். ஆர்சிபி வென்றால் சிறப்பாக இருக்கும் எனக் கூறி ஐபிஎல் கிரிக்கெட்டில் பரபரப்பை பற்ற வைத்துள்ளார் ஸ்ரீசாந்த்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai Super Kings, CSK, MS Dhoni, Sreesanth