ஐபிஎல் கிரிக்கெட் தொடரை மொபைல், லேப்டாப்பில் எப்படி இலவசமாக பார்க்கலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 16 ஆவது ஐபிஎல் தொடர் நாளை தொடங்கவுள்ளது. இந்த முறை ஐபிஎல் டைட்டிலை டாடா நிறுவனம் ஸ்பான்சர் செய்கிறது. மொத்தம் 70 லீக் போட்டிகள் இந்த தொடர் முழுவதும் நடைபெறவுள்ளன. இதைத் தொடர்ந்து ப்ளே ஆஃப், 3 ஆம் இடத்திற்கான போட்டி மற்றும் ஃபைனல் மேட்ச் ஆகியவை நடைபெறவுள்ளன.
கடந்த ஐபிஎல் மற்றும் அதற்கு முந்தைய போட்டிகள் சிலவற்றை ரசிகர்கள் ஹாட்ஸ்டார் ஆப் மூலமாக மொபைல் மற்றும் லேப்டாப்களில் பார்த்தனர். இந்த சீசனின் ஒளிபரப்பு உரிமையை ஜியோ சினிமா பெற்றுள்ளது. மேலும் நடப்பு ஐபிஎல் தொடரை எந்த கட்டணமும் இல்லாமல் 4K HD தரத்துடன் ஜியோ சினிமா தளங்களில் பார்த்து மகிழலாம். ஸ்மார்ட் டிவி, மொபைல் போனில் ஐபிஎல் தொடரை இலவசமாக பார்க்க JIO CINEMA என்ற ஆப்பை டவுண்லோட் செய்து அதன் வழியே பார்க்கலாம். லேப்டாப்பில் பார்க்க விரும்புவோர் jiocinema.com என்ற தளத்திற்கு சென்று அதன் மூலம் பார்த்து மகிழலாம்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, பெங்காலி, போஜ்புரி உள்ளிட்ட 12 மொழிகளில் வர்ணனை செய்யப்படவுள்ளது. இதில் தேவைப்படும்போது எந்த கமென்டரியையும் மாற்றிக் கொள்ள முடியும். முதல் போட்டி நாளை நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொள்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மொத்தம் 7 போட்டிகள் நடத்தப்படவுள்ளன. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தலா 14 போட்டிகளில் மோதும். சென்னை அணி சேப்பாக்கம் மைதானத்தில் 7 போட்டிகளிலும் மற்ற மைதானங்களில் 7 போட்டிகளிலும் விளையாடவுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.