முகப்பு /செய்தி /விளையாட்டு / ஐபிஎல் டிக்கெட்டுகள் இன்று முதல் விற்பனை.. சேப்பாக்கத்தில் குவிந்த கிரிக்கெட் ரசிகர்கள்

ஐபிஎல் டிக்கெட்டுகள் இன்று முதல் விற்பனை.. சேப்பாக்கத்தில் குவிந்த கிரிக்கெட் ரசிகர்கள்

ஐபிஎல் கிரிக்கெட்

ஐபிஎல் கிரிக்கெட்

IPL 2023: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 3 ஆண்டு இடைவேளைக்குப் பிறகு ஏப்ரல் 3-ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடவுள்ளது.

  • Last Updated :
  • Chennai, India

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 3-ம் தேதி நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 9.30 மணிக்கு தொடங்க உள்ளது.

நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில், வரும் 31-ம் தேதி தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 3 ஆண்டு இடைவேளைக்குப் பிறகு ஏப்ரல் 3-ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடவுள்ளது.

இந்தப் போட்டியில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது. இதனால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கும் நிலையில், எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் 2 கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

top videos

    டிக்கெட்டுகள் ரூ. 1,500 இருந்து ரூ.3,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. PAYTM மற்றும் www.insider.in என்ற இணையதளங்கள் மூலமாகவும் டிக்கெட்டுகளை ஆன்லைன பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    First published:

    Tags: Chennai Super Kings, Cricket, IPL 2023, MS Dhoni, Mumbai Indians