முகப்பு /செய்தி /விளையாட்டு / ‘டெல்லி அணியில் விளையாட தகுதியற்றவர்…’ – மணிஷ் பாண்டேவை கடுமையாக விமர்சிக்கும் ஸ்ரீகாந்த்…

‘டெல்லி அணியில் விளையாட தகுதியற்றவர்…’ – மணிஷ் பாண்டேவை கடுமையாக விமர்சிக்கும் ஸ்ரீகாந்த்…

மணிஷ் பாண்டே - ஸ்ரீகாந்த்

மணிஷ் பாண்டே - ஸ்ரீகாந்த்

டெல்லி அணி கடைசி ஓவரில் வெற்றி பெற்றது. குறிப்பாக மணிஷ் பாண்டே 23 பந்துகளில் 21 ரன்கள் மட்டுமே எடுத்து டெல்லி ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி அணியின் மணிஷ் பாண்டே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில் அவர் அணியில் இருக்க தகுதியற்றவர் என்று முன்னாள் கிரிக்கெட் வீரரும் விமர்சகருமான ஸ்ரீகாந்த் கூறியுள்ளார். முந்தைய ஐபிஎல் சீசன்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை பெற்ற மணிஷ் பாண்டே தற்போது ஆமை வேகத்தில் விளையாடிய பொறுமையை சோதித்து வருகிறார். டெல்லி அணியில் இடம்பெற்றுள்ள மணிஷ் பாண்டேவின் பேட்டிங் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

நேற்று நடந்த போட்டியில் வார்னே தலைமையிலான டெல்லி மற்றும் நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய கொல்கத்தா அணி 127 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி டெல்லி அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாடினர். கேப்டன் வார்னர் 41 பந்தில் அதிரடியாக 57 ரன்கள் எடுத்தார். அவரை தவிர்த்து மற்றவர்கள் மிக மெதுவாக ரன்களை சேர்த்ததால் டெல்லி அணி கடைசி ஓவரில் வெற்றி பெற்றது. குறிப்பாக மணிஷ் பாண்டே 23 பந்துகளில் 21 ரன்கள் மட்டுமே எடுத்து டெல்லி ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார்.

top videos

    டெல்லி அணியின் வெற்றிக்கு பின்னர் வர்ணனையாளர் மீடோஸ் மணிஷ் பாண்டே குறித்து என்ன நினைக்கிறீர்கள்… அவர் ரன்களை எடுக்க சிரமப்படுகிறார் என்று கேட்டார். இதற்கு பதில் அளித்த ஸ்ரீகாந்த், அவரைப் பெற்றியெல்லாம் எதற்காக கேட்கிறீர்கள்.? அவரைப் பற்றி பேச நான் விரும்பவில்லை. மணிஷ் பாண்டே டெல்லி அணியிலேயே இருக்க கூடாது. அதற்கான தகுதி அவருக்கு இல்லை. நாம் அக்சர் படேல் பற்றி பேச வேண்டும். நீண்டபோராட்டத்திற்கு பின்னர் அவர் சிறந்த பேட்ஸ்மேனாக உருவெடுத்துள்ளார். மணிஷ் பாண்டே அணியிலேயே இருக்க கூடாது. நான் தேர்வுக்குழு தலைவராக இருந்திருந்தால் மணிஷ் பாண்டே அணியில் இருக்க மாட்டார். இவ்வாறுஅவர் கூறியுள்ளார்.

    First published:

    Tags: IPL, IPL 2023