முகப்பு /செய்தி /விளையாட்டு / இஸ்லாமியர்கள் குறித்து சர்ச்சை பதிவு… குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் மன்னிப்பு கேட்டார்…

இஸ்லாமியர்கள் குறித்து சர்ச்சை பதிவு… குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் மன்னிப்பு கேட்டார்…

யாஷ் தயாள்

யாஷ் தயாள்

தயவு செய்து வெறுப்பை பரப்ப வேண்டாம். ஒவ்வொரு சமூகத்தின் மீதும் நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன் – யாஷ் தயாள்

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை தூண்டும் வகையில் பதிவிட்ட குஜராத் டைட்டன்ஸ் அணியின் யாஷ் தயாள், மன்னிப்பு கேட்டுள்ளார். இந்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் பந்து வீச்சாளர் யாஷ் தயாள் இடம்பெற்றிருந்தார். தனது அணிக்காக சிறப்பான முறையில் விளையாடினாலும் கொல்கத்தாவுக்கு எதிரான லீக் மேட்ச்சில் கடைசி ஓவரில் 5 சிக்சர்களை தொடர்ச்சியாக விட்டுக் கொடுத்தார். இந்த 5 சிக்சர்களையும் அடித்தவர் ரின்கு சிங்.

கொல்கத்தா அணியின் ரின்கு சிங் ஒரே நாளில் பிரபலம் அடைய யாஷ் தயாள் ஒருவகையில் காரணமாக இருந்துள்ளார். இந்நிலையில் யாஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை தூண்டும் வகையிலான பதிவு ஒன்றை போஸ்ட் செய்துள்ளார். இந்த நிகழ்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பின்னர் இதற்காக தயாள் மன்னிப்பு கேட்டுள்ளார்.

யாஷ் தயாள் தனது மற்றுமொரு இன்ஸ்டாகிராம் பதிவில், இஸ்லாமியர்கள் தொடர்பான பதிவை நான் தவறுதலாக போஸ்ட் செய்து விட்டேன்.

இதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து வெறுப்பை பரப்ப வேண்டாம். ஒவ்வொரு சமூகத்தின் மீதும் நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன் என்று கூறியுள்ளார். தற்போது இந்த விவகாரம் பரபரப்பை ஏற்டுத்தி வருகிறது.

First published:

Tags: IPL, IPL 2023