முகப்பு /செய்தி /விளையாட்டு / மாஸ் காட்டிய பாண்டியா! ராஜஸ்தானை வீழ்த்தி பழி தீர்த்த குஜராத் அணி!..

மாஸ் காட்டிய பாண்டியா! ராஜஸ்தானை வீழ்த்தி பழி தீர்த்த குஜராத் அணி!..

குஜராத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

குஜராத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

Rajasthan Royals vs Gujarat Titans | 12 புள்ளிகளை கொண்டிருந்த குஜராத் டைட்டன்ஸ் அணி, நேற்று மீண்டும் வென்றதால் 14 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

  • Last Updated :
  • Jaipur, India

ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று நடந்த 48வது லீக் போட்டியில் ராஜஸ்தானை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் அணி அபார வெற்றி பெற்றது

நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன. பிளே ஆஃப் வாய்ப்பை பிரகாசப்படுத்துவதற்காக நேற்று 48வது லீக் போட்டி நடைபெற்றது. ஜெய்ப்பூரில் உள்ள மைதானத்தில் நடந்த போட்டியில் ராஜஸ்தான்-குஜராத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில், அந்த அணியின் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் மட்டுமே அதிகபட்சமாக 30 ரன்கள் எடுத்தார்.

17 புள்ளி 5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ராஜஸ்தான் அணி 118 ரன்களில் சுருண்டது. குஜராத் தரப்பில் ரஷீத்கான் அட்டகாசமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை சாய்த்தார். 119 ரன்கள் என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி வீரர்கள் அடித்து ஆடினர். அந்த அணியில் அதிகபட்சமாக விக்கெட் கீப்பரும் தொடக்க ஆட்டக்காரருமான சாஹா 41 ரன்கள் எடுத்தார். 13 புள்ளி 5 ஓவர்களில் ஒரே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 119 ரன்களை சர்வசாதாரணமாக எட்டியது.

புள்ளிப்பட்டியலில் ஏற்கனவே 12 புள்ளிகளை கொண்டிருந்த குஜராத் டைட்டன்ஸ் அணி, நேற்று மீண்டும் வென்றதால் 14 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 10ல் தலா 5 வெற்றி மற்றும் 5 தோல்விகளை கண்டுள்ள ராஜஸ்தான் அணி 4ஆம் இடத்தில் உள்ளது.

top videos
    First published:

    Tags: Gujarat Titans, IPL 2023, Rajasthan Royals