முகப்பு /செய்தி /விளையாட்டு / ஐபிஎல் 2023; ருத்ரதாண்டவம் ஆடிய ருதுராஜ்... கடைசி ஓவரில் கலக்கிய தோனி...

ஐபிஎல் 2023; ருத்ரதாண்டவம் ஆடிய ருதுராஜ்... கடைசி ஓவரில் கலக்கிய தோனி...

ருதுராஜ் - டோனி

ருதுராஜ் - டோனி

Gujarat Titans vs Chennai Super Kings | சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களை குவித்தது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று அகமாதபாத் நரேந்திர மோடி மைதானத்தில் கலை நிகழ்ச்சிகளுடன் கோலகலமாக தொடங்கியது. டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹார்திக் பாண்டிய முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி சென்னை அணி தொடக்க வீரர் கான்வே மற்றும் ருதுராஜ் களமிறங்கினர்.  முகமது ஷமி பந்தில் கான்வே 1 ரன்னில்  ஆட்டமிழந்து வெளியேறினார். இதனையடுத்து ருதுராஜூடன் கைகோர்த்த மொயின் அலி அதிரடியாக விளையாடி ரஷித் கான் பந்தில் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறி சென்னை ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். தொடர்ந்து ருதுராஜ் குஜராத் அணியின் பந்துவீச்சை நாலாப்புறமும் பறக்கவிட்டார். அதிரடியாக விளையாடிய ருத்துராஜ் 9 சிக்சர்கள் அடுத்தார்.  17.1 வது ஓவரில் 52 பந்துகளில் 92 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஜடேஜாவும் 1 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். கடைசி ஓவரில் சென்னை அணி கேப்டன் தோனி ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்து ரசிகர்களை உற்சாகமூட்டினார். தோனி 7 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.

top videos

    இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களை குவித்தது. 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி விளையாடி வருகிறது.

    First published:

    Tags: CSK, Gujarat Titans, IPL 2023