முகப்பு /செய்தி /விளையாட்டு / பாண்டியாவின் வியூகம் மீண்டும் கை கொடுக்குமா? குஜராத் அணி எப்படி இருக்கிறது

பாண்டியாவின் வியூகம் மீண்டும் கை கொடுக்குமா? குஜராத் அணி எப்படி இருக்கிறது

குஜராத் டைட்டன்ஸ்

குஜராத் டைட்டன்ஸ்

Gujarat Titans | 15 வருட ஐபிஎல் தொடரில் முதன் முறையாக களமிறங்கிய குஜராத் அணி சாம்பியன் பட்டம் வென்று அனைவரையும் வியக்க வைத்தது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

குஜராத் டைட்டன்ஸ் கோப்பை வென்றதில் ஹார்திக் பாண்டியாவின் கேப்டன்சிக்கு ஒரு முக்கியப் பங்குண்டு. இந்த முறையும் பாண்டியாவின் ஆர்ப்பாட்டம் இல்லாத கேப்டன்சியை குஜராத் அணி பெரிதாக நம்பியுள்ளது. குறிப்பாக கடந்த சீசனில் சுப்மன் கில், ஹார்திக் பாண்டிய, டேவிட் மில்லர், ரஷித் கான், ராகுல் திவாதியா உள்ளிட்ட 8 வீரர்கள் ஆட்ட நாயகன் விருதை வென்று அசத்தி இருந்தனர். இதில் அந்த அணியின் கூட்டு முயற்சியை நாம் தெரிந்து கொள்ளலாம்.

ஐபிஎல் ஏலத்தில் 18வீரர்களை தக்க வைத்து கொண்ட குஜராத் அணி இந்த முறை வில்லியம்சன், ஓடியன் சுமித்,ஷிவம் மாவி, உள்ளிட்ட வீரர்களை ஏலத்தில் எடுத்து கூடுதல் பலத்தை பெற்றுள்ளது.

இந்த சீசனில் மேத்யூ வேட் அணியில் இடம்பிடிக்கும் பட்சத்தில் சாஹாவுக்கு பதிலாக அவர் துவக்க வீரராக களமிறங்கலாம். டாப் 4-ன் ஓர் அங்கமான வில்லியம்சன் மூன்றாவது இடத்தில் இறங்க வாய்ப்புள்ளது.தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்சனுக்கும் கூட மூன்றாம் இடத்தில் ஒரு வாய்ப்பு உள்ளது.

குஜராத் டைட்டன்ஸ் அணியின் முக்கிய துருப்புச் சீட்டாக அந்த அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா கருதப்படுகிறார். பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் பங்களிப்பை செலுத்தும் வீரர் அவர். குறிப்பாக மிடில் ஓவர்களில் பாண்டியாவின் பந்துவீச்சை குஜராத் அணி பெரிதும் நம்பியிருக்கிறது. சமீப காலமாக இன் ஸ்விங் பந்தையும் பாண்டியா நுட்பமாக வீசிவருகிறார். இது பவர் பிளே ஓவர்களில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சாதகமாகப் பார்க்கப்படுகிறது.

குஜராத் டைட்டன்ஸ் அணி விவரம்:

top videos

    ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ஷுப்மன் கில், டேவிட் மில்லர், அபினவ் மனோகர், சாய் சுதர்சன், விருத்திமான் சாஹா, மேத்யூ வேட், ரஷித் கான், ராகுல் தெவாடியா, விஜய் சங்கர், முகமது ஷமி, அல்சாரி ஜோசப், யாஷ் தயாள், பிரதீப் சங்வான், தர்ஷன் நல்கண்டே, ஜெயந்த் யாத் , ஆர். சாய் கிஷோர், நூர் அகமது, கேன் வில்லியம்சன், ஒடியன் ஸ்மித், கேஎஸ் பாரத், சிவம் மாவி, உர்வில் பட்டேல், ஜோசுவா லிட்டில், மோஹித் ஷர்மா.

    First published:

    Tags: Gujarat Titans, IPL 2023