முகப்பு /செய்தி /விளையாட்டு / சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் காயம்… ஐபிஎல் தொடரிலிருந்து கேன் வில்லியம்சன் விலகல்

சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் காயம்… ஐபிஎல் தொடரிலிருந்து கேன் வில்லியம்சன் விலகல்

காயம் அடைந்த கேன் வில்லியம்சன் அழைத்து செல்லப்படும் காட்சி.

காயம் அடைந்த கேன் வில்லியம்சன் அழைத்து செல்லப்படும் காட்சி.

நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் கேரி ஸ்டீட், வில்லியசம்னுக்கு ஏற்பட்டுள்ள காயம் அவருக்கு மட்டுமின்றி குஜராத் அணிக்கும் பின்னடைவு என்று கூறியுள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் காயம் அடைந்த குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேன் வில்லியம்சன் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 16 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நேற்று முன் தினம் வண்ணமயமான கொண்டாட்டத்துடன் தொடங்கியது. முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 50 பந்துகளில் 92 ரன்கள் குவித்தார்.

மொயின் அலி 23, ஷிவம் துபே 19, தோனி 14 ரன்கள் எடுத்தனர். இதையடுதது 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 19.2 ஓவரில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. அந்த அணியின் சுப்மன் கில் 36 பந்துகளில் 63 ரன்களை அதிரடியாக சேர்த்து வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். சென்னை அணியின் பேட்டிங்கின் போது 13 ஓவது ஓவரில் ருதுராஜ் அடித்த பந்தை கேன் வில்லியம்சன் தடுக்க முற்பட்டார். அப்போது வில்லியம்சனின் முழங்கால் தரையில் மோதியதால் காயம் ஏற்பட்டது.

top videos

    இதனால் துடித்துப் போன அவரை, குஜராத் அணியின் உதவியாளர்கள் பத்திரமாக அழைத்துச் சென்றனர். முதற்கட்ட மருத்துவ பரிசோதனையின் அடிப்படையில் வில்லியம்சன் குணம் அடைய நீண்ட நாட்கள் ஆகும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர் தொடரிலிருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் கேரி ஸ்டீட், வில்லியசம்னுக்கு ஏற்பட்டுள்ள காயம் அவருக்கு மட்டுமின்றி குஜராத் அணிக்கும்  பின்னடைவு என்று கூறியுள்ளார்.  சமீபத்தில் நடந்த ஏலத்தில் வில்லியம்சனை குஜராத் அணி ரூ. 2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

    First published:

    Tags: IPL, IPL 2023