முகப்பு /செய்தி /விளையாட்டு / மோசமான சாதனையில் இருந்து பாடம் கற்ற அர்ஜூன்.. ! - பவர் ப்ளேயில் அபாரம்..!

மோசமான சாதனையில் இருந்து பாடம் கற்ற அர்ஜூன்.. ! - பவர் ப்ளேயில் அபாரம்..!

அர்ஜூன் டெண்டுல்கர்

அர்ஜூன் டெண்டுல்கர்

அட்டகாசமாக பந்துவீசிய அர்ஜூன் முதல் ஓவரில் 4 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Ahmadabad, India

நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக கவனம் பெறும் வீரராக அர்ஜூன் டெண்டுல்கர் இருக்கிறார். சச்சின் டெண்டுல்கரின் வாரிசு என்பதால் அவர் மீது எதிர்பார்ப்பு எகிறியது. மும்பை அணிக்காக கடந்த சீசனில் எடுக்கப்பட்டாலும் அவரை பிளேயிங் லெவனில் கொண்டு வரவில்லை. நெட் பவுலராக அவரை பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் தான் நடப்பு சீசனில் அவரை களமிறக்கியுள்ளது மும்பை அணி. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக களமிறங்கிய அர்ஜூன் 2 ஓவர்கள் வீசி 17 ரன்கள் விட்டுக்கொடுத்தார் விக்கெட் எடுக்கவில்லை. இரண்டாவது போட்டியில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக 18 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை எடுத்து டீசண்டாக பந்துவீசினார்.

இதன்காரணமாக மூன்றாவது போட்டியில் அர்ஜூன் மீது கொஞ்சம் எதிர்ப்பார்ப்பு இருந்தது. ஆனால் அந்தப்போட்டி அர்ஜூனின் ஒரு ஓவரில் தலைகீழாக மாறியது. பஞ்சாப் எதிரான 3-வது போட்டியில் அர்ஜூன் வீசிய 16-வது ஓவரில் சிக்ஸர் பவுண்டரிகளாக பறக்க பதற்றத்தில் அவரும் ஒரு வைடு நோபால் என எக்ஸ்ட்ராஸ் வீச 31 ரன்களை வாரி வழங்கினார். ஐபிஎல் கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் அதிக ரன்களை வாரி வழங்கிய இரண்டாவது வள்ளல் என்ற மோசமான சாதனையை எதிர்க்கொண்டார். அர்ஜூன் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என முன்னாள் வீரர்கள் சிலர் கருத்து தெரிவித்தனர்.

இதையும் படிங்க: மீண்டும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ரஹானே..! எப்படி தெரியுமா..?

இந்நிலையில் குஜராத் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் பவர்-ப்ளே ஓவர்களில் அர்ஜூன் மிரட்டினார். கேப்டன் ரோஹித் ஷர்மா நம்பிக்கையுடன் முதல் ஒவரை அர்ஜூனுக்கு கொடுத்தார். அட்டகாசம் பந்துவீசிய அர்ஜூன் முதல் ஓவரில் 4 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். தனது இரண்டாவது ஓவரின் முதல் பந்திலே சஹாவின் விக்கெட்டை எடுத்து நம்பிக்கை கொடுத்தார் அர்ஜூன். பவர் ப்ளேயில் இரண்டு ஓவர்களை வீசிய அர்ஜூன் 9 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டையும் எடுத்தார்.

First published:

Tags: Arjun Tendulkar, Cricket, IPL 2023