முகப்பு /செய்தி /விளையாட்டு / GT vs CSK IPL 2023: முதல் போட்டியிலே தோனி இல்லையா..? ரசிகர்களுக்கு ஷாக்

GT vs CSK IPL 2023: முதல் போட்டியிலே தோனி இல்லையா..? ரசிகர்களுக்கு ஷாக்

தோனி

தோனி

IPL 2023 : தோனி விளையாடுவது குறித்து அணி நிர்வாகம் தான் முடிவெடுக்கும் என்று கூறப்படுகிறது.

  • Last Updated :
  • Chennai, India

இன்று நடைபெற உள்ள ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் தோனி விளையாடுவதில் சந்தேகம் எழுந்துள்ளது.

சென்னை -குஜராத் அணிகள் மோதும் முதல் போட்டி இன்று அகமதாபாத்தில் நடைபெற இருக்கிறது. சென்னை சேப்பாக்கம் மற்றும் அகமதாபாத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மகேந்திரசிங் தோனியின் இடதுகாலின் மூட்டுப்பகுதியில் வலி இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தோனி இன்றைய போட்டியில் விளையாடுவதில் சந்தேகம் எழுந்திருக்கிறது.

தோனி சென்னை அணியை வழிநடத்தவில்லை எனில் அவருக்கு பதில் பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக செயல்பட அதிக வாய்ப்புள்ளது. விக்கெட் கீப்பராக நியூசிலாந்து வீரர் டெவான் கான்வே செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் தோனி விளையாடுவது குறித்து அணி நிர்வாகம்தான் முடிவெடுக்கும் என்று கூறப்படுகிறது.

Also Read:  IPL 2023 : இன்று தொடங்குகிறது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா.. மிரட்ட காத்திருக்கும் அணிகள்..!

 கடந்த முறை தோனிக்கு பதில் ஜடேஜா கேப்டனாக இருந்த நிலையில் அடுத்தடுத்த தோல்விகளால் கடந்த சீசனில் சென்னை அணி மிக மோசமாக விமர்சிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

top videos
    First published:

    Tags: CSK, IPL 2023, MS Dhoni, Tamil News