முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023: ‘தல’ தோனி இல்லாம சிஎஸ்கே என்ட்ரியா.. சான்ஸே இல்லை - ரசிகர்களுக்கு குட்நியூஸ் சொன்ன சிஎஸ்கே நிர்வாகம்

IPL 2023: ‘தல’ தோனி இல்லாம சிஎஸ்கே என்ட்ரியா.. சான்ஸே இல்லை - ரசிகர்களுக்கு குட்நியூஸ் சொன்ன சிஎஸ்கே நிர்வாகம்

தோனி

தோனி

தோனி நிச்சயம் இன்றைய போட்டியில் விளையாடுவார் என தகவல் கிடைத்துள்ளது.

  • Last Updated :
  • Chennai, India

மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் தோனியின் தரிசனத்துக்காக இன்னும் ஏங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள் அவரது ரசிகர்கள். தோனி கொஞ்சம் வித்யாசமானவர். ஸ்மார்டாக இருக்கும் தல தோனி இந்த ஸ்மார்ட்போன் யுகத்திலும் யாரிடம் சிக்காமல் இருக்கிறார். தோனிக்கு ட்விட்டர், இன்ஸ்டாகிராம் கணக்குகள் இருந்தாலும் அந்தப்பக்கங்களில் பெரிதாக அவர் ஆர்வம் காட்டுவதில்லை.

தோனி கிரிக்கெட் ஆடும் போது எப்போது அவர் ட்ரெஸிங் ரூம் திறந்தே இருக்கும் வீரர்கள் எப்போதும் அவரை அணுகலாம் எனக் கேள்விப்பட்டிருக்கிறோம். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு தோனியை செல்போனில் பிடிப்பதே அரிது என்கிறார்கள் கிரிக்கெட் வீரர்கள். கோலியே சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். ஃபார்ம் அவுட்டில் கோலி இருந்த காலக்கட்டத்தில் அவருக்கு ஆறுதலான வார்த்தைகளை கூறியது தோனி தானாம். தோனியை பிடிக்க முடியாது ஆனால் அவர்தான் என்னை அழைத்து பேசினார் என கோலியே தெரிவித்தார்.

தோனி தற்போது ஐபிஎல் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வருகிறார். சென்னை சேப்பாக்கத்தில் பயிற்சி ஆட்டத்தில் விளையாடிய தோனியை பார்க்கவே ஒரு கூட்டம் கூடியது என்றால் பாருங்கள். தோனி சென்னை வந்தது முதல் சேப்பாக்கத்தில் பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது வரை வீடியோ போட்டோ என அனைத்தையும் சமூகவலைத்தளத்தில் ட்ரெண்டிங் ஆக்கினார்கள் தோனி ஃபேன்ஸ்.

Also Read:  IPL 2023 : இன்று தொடங்குகிறது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா.. மிரட்ட காத்திருக்கும் அணிகள்..!

 இன்று தொடங்கும் 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை - குஜராத் அணிகள் மோதும் முதல் போட்டி அகமதாபாத்தில் நடைபெற இருக்கிறது. இந்தப்போட்டியில் களமிறங்கும் தோனியை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நேரத்தில் தோனி விளையாடுவதில் சந்தேகம் என ஒரு தகவல் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்து.

top videos

    சென்னை சேப்பாக்கம் மற்றும் அகமதாபாத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மகேந்திரசிங் தோனியின் இடதுகாலின் மூட்டுப்பகுதியில் வலி இருந்ததாவும் இதன் காரணமாக தோனி இன்றைய போட்டியில் விளையாடுவதில் சந்தேகம் எழுந்திருக்கிறது என்று கூறப்பட்டது. தோனி சென்னை அணியை வழிநடத்தவில்லை எனில் அவருக்கு பதில் பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக செயல்பட அதிக வாய்ப்புள்ளது எனக் கூறப்பட்டது. காயம் காரணமாக தோனி விளையாடமாட்டார் எனக் கூறி வந்த நிலையில் தோனி நிச்சயம் இன்றைய போட்டியில் விளையாடுவார் என தகவல் கிடைத்துள்ளது. குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் தோனி நிச்சயம் பங்கேற்பார் என சென்னை அணியின் சிஇஒ காசி விஸ்வநாதன் கூறியுள்ளார்.

    First published:

    Tags: CSK, IPL 2023, MS Dhoni, Tamil News