ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணி 5 போட்டிகளுக்கு பின்னர் முதல் வெற்றியைப் பெற்றது. இதுகுறித்து பேட்டி அளித்துள்ள அந்த அணியின் இயக்குனர் சவுரவ் கங்குலி, முதல் டெஸ்ட் போட்டியில் முதல் ரன்னை எடுத்ததைப் போல் உணர்ந்ததாக கூறியுள்ளார். அணியின் நிர்வாக கமிட்டியில் சவுரவ் கங்குலி, பயிற்சியாளர் பான்டிங், ஷேன் வாட்சன், அஜித் அகர்கர் உள்ளிட்ட ஜாம்பவான்கள் இருந்தபோதிலும் டெல்லி அணி இந்த ஐபிஎல் தொடரில் தள்ளாடி வருகிறது.
டெல்லி அணி தான் விளையாடிய முதல் 5 போட்டிகளில் தோல்வியடைந்த நிலையில் நேற்று கொல்கத்தா அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் அதனை 127 ரன்களில் டெல்லி அணி சுருட்டியது. இதன்பின்னர் 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணியால் கடைசி ஓவரில்தான் வெற்றி பெற முடிந்தது. இந்த போட்டியில் வெற்றி பெற்றது குறித்து டெல்லி கேபிடல்ஸ் அணியின் இயக்குனர் சவுரவ் கங்குலி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-
டெல்லி அணி தனது வெற்றிக் கணக்கை தொடங்கியுள்ளது. இந்த வெற்றியை 25 ஆண்டுகளுக்கு முன்பாக டெஸ்ட் போட்டியில் நான் முதல் ரன்னை எடுத்ததைப் போன்று உணர்கிறேன். இந்த போட்டியில் எங்களுக்கு அதிர்ஷ்டமும் கை கொடுத்துள்ளது. இந்த சீசன் முழுவதும் நாங்கள் மிகச் சிறப்பாக பந்து வீசியுள்ளோம். எங்களுக்கு பிரச்னையே பேட்டிங் தான். எப்படி எங்களை பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் நாங்கள் இன்னும் கவனம் செலுத்த வேண்டும். சுழற்பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சு அற்புதமாக இருந்தது. பிரித்வி ஷா, மிட்செல் மார்ஷ், மணிஷ் பாண்டே என அனைவரும் எங்களைப் பொருத்தளவில் முக்கியமான ஆட்டக்காரர்கள். நாங்கள் அடுத்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளோம். இந்த ஆட்டத்திலும் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.