முகப்பு /செய்தி /விளையாட்டு / ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டனுக்கு கேன்சர்… மரணப்படுக்கையில் உயிருக்கு போராட்டம்

ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டனுக்கு கேன்சர்… மரணப்படுக்கையில் உயிருக்கு போராட்டம்

ஹீத் ஸ்ட்ரீக்

ஹீத் ஸ்ட்ரீக்

ஹீத் ஸ்ட்ரீக்கிற்கு ஏற்பட்டுள்ள கல்லீரல் புற்று நோய் 4 ஆவது கட்டத்தை அடைந்துள்ளது

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். பாதிப்பு தீவிரம் அடைந்துள்ள நிலையில் அவரது உயிரை மீட்க மருத்துவர்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வே, கிரிக்கெட் போட்டிகள் மூலமாக இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் நல்ல அறிமுகத்தை பெற்றுள்ளது. அந்த அணியின் முக்கிய ஆல் ரவுண்டராகவும், கேப்டனாகவும் இருந்தவர் ஹீத் ஸ்ட்ரீக். 49 வயதாகும் அவர் ஜிம்பாப்வே அணிக்காக 65 டெஸ்ட் மற்றும் 189 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இந்த நிலையில் ஹீத் ஸ்ட்ரீக்கிற்கு ஏற்பட்டுள்ள புற்று நோய் பாதிப்பு தீவிரம் அடைந்துள்ளது. இதையடுத்து அவர் தென்னாப்பிரிக்காவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு அபாய கட்டத்தில் இருப்பதாக கூறியுள்ள மருத்துவர்கள், அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே அவர் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

top videos

    ஹீத் ஸ்ட்ரீக்கிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து அவரது நண்பரும், ஜிம்பாப்வே அணியின் வீரருமான சீன் வில்லியம்ஸ் கூறியதாவது- ஹீத் ஸ்ட்ரீக்கிற்கு ஏற்பட்டுள்ள கல்லீரல் புற்று நோய் 4 ஆவது கட்டத்தை அடைந்துள்ளது. இது அபாய கட்டம் என்பதால் அவரது குடும்பத்தினர் தென்னாப்பிரிக்காவுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டுள்ளனர். ஸ்ட்ரீக்கின் நிலைமை எப்படி உள்ளது என்று நான் அவரது குடும்பத்தினருக்கு மெசேஜ் அனுப்பினேன். நான் பெற்ற தகவலை ஸ்ட்ரீக் குடும்பத்தின் தனியுரிமை கருதி வெளியிட முடியாது. கேன்சர் பாதிப்பு அவரது உடலில் நன்றாக பரவியுள்ளது. எங்களால் இந்த நேரத்தில் அவருக்காக பிரார்த்தனைதான் செய்ய முடியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் வங்கதேசம் உள்ளிட்ட பல அணிகளின் பயிற்சியாளராக ஹீத் ஸ்ட்ரீக் பணியாற்றியுள்ளார்.

    First published:

    Tags: IPL, IPL 2023