ஐபிஎல் வரலாற்றில் முதன் முறையாக சென்னை அணி சுரேஷ் ரெய்னா இல்லாமல் சேப்பாக்கம் மைதானத்தில் இன்று களமிறங்கவுள்ளது.
16-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இந்தியாவில் கடந்த மார்ச் 31-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. தற்போது லீக் சுற்று போட்டிகள் நடந்து வருகிறது. குஜராத் அணியுடன் முதல் போட்டியில் தோல்வியைத் தழுவிய சென்னை சூப்பர் கிங்ஸ் இன்றைய போட்டியில் லக்னோ அணியை எதிர்கொள்கிறது. கிட்டதட்ட நான்கு வருடங்களுக்கு பிறகு சிஎஸ்கே அணி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட உள்ளதால் போட்டியை கான ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
கடைசியாக 2019ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. அதன் பிறகு கொரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு விதிமுறைகளுக்கு உட்பட்டு குறிப்பிட்ட சில மைதானங்களில் மட்டுமே போட்டிகள் நடத்தப்பட்டதால் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நான்கு வருடங்களாக ஐபிஎல் போட்டிகள் நடைபெறவில்லை. இந்த ஆண்டு மீண்டும் பழைய முறைப்படி ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதால் சேப்பாக்கம் மைதானத்தில் போட்டிகள் நடக்கிறது.
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரில் பங்கேற்றதில் இருந்து அந்த அணியின் மற்றோரு முகமகாவும் ”சின்ன தல” என ரசிகர்கள் அன்போடு அழைக்கப்பட்ட சுரேஷ் ரெய்னா 2022 ஏலத்தில் சென்னை அணி அவரை கழட்டிவிட்டது. இதனால் சென்னை அணியை தவிர மற்ற அணிக்கு விளையாட மாட்டேன் என ரெய்னா கூறி அனைத்து வகையான போட்டிகளிலும் இருந்து ஓய்வை அறிவித்தார்.சென்னை அணிக்கு எப்படி தோனி ஒரு முகமோ அதுபோல ரெய்னாவும் மற்றோரு முகமாக திகழ்ந்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளார். 4 வருடங்களுக்கு பிறகு சேப்பாக்கம் மைதானத்தில் களமிறங்கும் சிஎஸ்கே அணி, சுரேஷ் ரெய்னா இல்லாமல் முதல்முறையாக களமிறங்கவுள்ளது. இதுவரை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே விளையாடிய அனைத்து போட்டிகளிலும் ரெய்னா விளையாடியுள்ளார்.
மிஸ்டர் ஐபிஎல் என ரசிகர்களால் அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா தொடர்ந்து ஏழு சீசன்களில் 400+ ரன்களை குவித்து அசத்தியுள்ளார். பேட்டிங்கைத் தவிர ரெய்னாவின் அபாரமான பீல்டிங் திறமை மற்றும் எளிமையான ஆஃப் ஸ்பின் ஆகியவை அவரை சிறந்த டி20 வீரராக மாற்றியது. ஐபிஎல் வரலாற்றில் விக்கெட் கீப்பர் அல்லாத ஒருவரால் அதிக கேட்சுகள் எடுத்தவர் என்ற சாதனையை அவர் இன்னும் வைத்திருக்கிறார். 2008ஆம் ஆண்டு துவங்கி 2019ஆம் ஆண்டு வரை இந்த மைதானத்தில் சிஎஸ்கே விளையாடிய ஒரு போட்டியையும் தவறவிடாமல் இடம்பெற்றுள்ள ரெய்னா சேப்பாக்கத்தில் விளையாடாதது ரசிகர்கள் மத்தியில் சற்று கவலையில் ஆழ்த்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CSK, IPL 2023, Suresh Raina