முகப்பு /செய்தி /விளையாட்டு / ‘2023 ஐபிஎல் கோப்பையை ஆர்.சி.பி. வெல்ல வேண்டும்’ – முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் விருப்பம்

‘2023 ஐபிஎல் கோப்பையை ஆர்.சி.பி. வெல்ல வேண்டும்’ – முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் விருப்பம்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு அணி 3 முறை இறுதிப் போட்டியில் விளையாடியுள்ளது. இருப்பினும் ஒருமுறை கூட அந்த அணி கோப்பையை வெல்லவில்லை

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு அணி 3 முறை இறுதிப் போட்டியில் விளையாடியுள்ளது. இருப்பினும் ஒருமுறை கூட அந்த அணி கோப்பையை வெல்லவில்லை

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு அணி 3 முறை இறுதிப் போட்டியில் விளையாடியுள்ளது. இருப்பினும் ஒருமுறை கூட அந்த அணி கோப்பையை வெல்லவில்லை

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

2023 ஐபிஎல் கிரிக்கெட் தொடரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெல்ல வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் விருப்பம் தெரிவித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இம்மாதம் 31 ஆம் தேதி தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் இந்த தொடரில் மோதுகின்றன. இந்த முறையும் சென்னை அணியின் கேப்டனாக தோனி தொடர்கிறார். ஐபிஎல் தொடரையொட்டி சென்னை அணி வீரர்கள் பயிற்சியை தொடங்கியுள்ளனர்.

ஐபிஎல் கோப்பையை 5 முறை மும்பை இந்தியன்ஸ் அணியும், 4 முறை சென்னை அணியும், 2 முறை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் வென்றுள்ளன. இந்நிலையில் 2023 ஐபிஎல் தொடர் குறித்து இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது- இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வெல்லும் என்று நான் கருதவில்லை.  சஞ்சு சாம்சன் கேப்டனாக இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சப்போர்ட் செய்கிறேன்.

இந்த முறை புதிய அணி கோப்பையை வென்றால் நன்றாக இருக்கும். இந்திய அணிக்காக விராட் கோலி ஏராளமான சாதனைகளை ஏற்படுத்தியுள்ளார். அவர் இடம்பெற்றிருக்கும் ஆர்.சி.பி அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்பது எனது விருப்பம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு அணி 3 முறை இறுதிப் போட்டியில் விளையாடியுள்ளது. இருப்பினும் ஒருமுறை கூட அந்த அணி கோப்பையை வெல்லவில்லை. 2009-இல் டெக்கன் சார்ஜர்ஸை, 2011-இல் சென்னை சூப்பர் கிங்ஸ், 2016-இன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு எதிராக இறுதிப் போட்டியில் விளையாடி பெங்களூரு அணி தோல்வியை தழுவியுள்ளது.

First published:

Tags: IPL, IPL 2023