முகப்பு /செய்தி /விளையாட்டு / தம்பி? மாமா? அத்தை? நடராஜன் குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் தோனி” - இணையத்தில் வைரலாகும் தோனி வீடியோ

தம்பி? மாமா? அத்தை? நடராஜன் குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் தோனி” - இணையத்தில் வைரலாகும் தோனி வீடியோ

நடராஜன் மகளுடன் விளையாடும் தோனி

நடராஜன் மகளுடன் விளையாடும் தோனி

Dhoni Plays with Natrajan Daughter | போட்டி முடிந்த பின்னர் தோனி நடராஜன் குடும்பத்தினரை சந்தித்து பேசினார்

  • Last Updated :
  • Chennai, India

சென்னை அணி கேப்டன் தோனி தமிழ்நாடு கிரிக்கெட் வீரர் நடராஜன் குழந்தையுடன் விளையாடும் வீடியோ வெளியாகி இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று சென்னை சேப்பாகத்தில் ஐதராபாத் - சென்னை அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த 134 ரன்கள் எடுத்தது. 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சென்னை அணி 18.4 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி வெற்றி இலக்கை எட்டியது.

போட்டி முடிந்த பின்னர் தோனி இளம் வீரர்களுடன் கலந்துரையாடல் ஆகி அவர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கி வருகிறார். இந்த நிலையில் நேற்றைய போட்டியை முடிந்த பின்னர் ஐதராபாத் அணி வீரர் நடராஜன் குழந்தையுடன் விளையாடும் வீடியோவை சென்னை அணி தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளது.

நேற்றைய போட்டியில் ஹைதராபாத் அணியின் நடராஜன் விளையாட வில்லை என்றாலும் அவர் தனது குடும்பத்துடன் போட்டியை பார்க்க சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்திருந்தார். இந்த நிலையில் போட்டி முடிந்ததும், நடராஜன் குழந்தையுடன் தல தோனி விளையாடிய வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

top videos

    தம்பி? மாமா? அத்தை? என நடராஜன் குழந்தை அடுத்தடுத்து மழலைக்குரலில் கேள்வி எழுப்பியதும் அதற்கு தோனி பதிலளித்து பேசுவதும் இடம்பெற்றுள்ளது. அந்த வீடியோவில் தோனி எனக்கு மகள்  இருக்கிறாள் என்று தோனி சொல்லவே, தம்பி இல்லையா என்று நடராஜனின் மகள் கேட்க, இல்லை இவ்வளவு உயரத்தில் ஒரு மகள் இருக்கிறாள் என்று தோனி சைகையால் கூறுகிறார்.

    First published:

    Tags: IPL 2023, MS Dhoni, Natarajan