முகப்பு /செய்தி /விளையாட்டு / டெல்லி அணிக்கு வார்னரின் அனுபவம் கைகொடுக்குமா? ரிஷப் பந்த் இல்லாதது என்ன பாதிப்பை ஏற்படுத்தும்?

டெல்லி அணிக்கு வார்னரின் அனுபவம் கைகொடுக்குமா? ரிஷப் பந்த் இல்லாதது என்ன பாதிப்பை ஏற்படுத்தும்?

டேவிட் வார்னர்

டேவிட் வார்னர்

Delhi Capitals | விபத்து காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்த் விளையாட முடியாமல் போனதால் ஆஸ்திரேலியா வீரர் டேவிட் வார்னர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் புதிய கேப்டன் டேவிட் வார்னரின் தலைமையின் கீழ் டெல்லி கேபிடல்ஸ் அணி விளையாடவுள்ளது. இந்த அணியின் பலம் மற்றும் பலவீனங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 16 ஆவது சீசன் தொடங்கவுள்ள நிலையில் டெல்லி அணி ஒரு முறை கூட சாம்பியன் பட்டத்தை இந்த தொடரில் வெல்லவில்லை.

டெல்லி டேர் டெவில்ஸ் என்று முதலில் அழைக்கப்பட்டு வந்த டெல்லி அணி 2019 ஐபிஎல் தொடரையொட்டி டெல்லி கேபிடல்ஸ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஒட்டுமொத்தமாக டெல்லி அணி ஒரேயொரு இறுதிப் போட்டியில் அதாவது 2020-இல் மட்டுமே விளையாடியது. இந்த போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி மும்பை அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் விபத்தில் ஏற்பட்ட காயத்திற்காக தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அவர் தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அணியின் புதிய கேப்டனாக டேவிட் வார்னர் நியமிக்கப்பட்டுள்ளார். அணியில் ப்ரித்வி ஷா மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோர் முக்கிய ஆட்டக்காரர்களாக கருதப்படுகின்றனர்.

இவர்கள், ரன் குவிப்பில் முக்கிய பங்காற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டேவிட் வார்னரும் தன் பங்கிற்கு சிக்சர் பவுண்டரிகளை விளாசுவார் என்பதால் டெல்லி அணியின் பேட்டிங் விறுவிறுப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

இவர்களுடன் ஃபில் சால்ட், அக்சர் படேல் ஆகியோர் பேட்டிங்கில் பலம் சேர்ப்பார்கள். மிடில் ஆர்டர் வரிசை மற்றும் வேகப்பந்து வீச்சு யூனிட்டில் போதிய அனுபவம் மிக்க ஆட்டக்காரர்கள் இல்லாதது பலவீனமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் இவற்றை திறமையாக கையாண்டு இந்த முறை வார்னர் கோப்பையை வென்று தருவார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். பந்து வீச்சில் தென்னாப்பிரிக்க வீரர் ஆன்ரிக் நோட்ஜ், குல்தீப் யாதவ், அக்சர் படேல் ஆகியோர் எதிரணிக்கு கடும் நெருக்கடி கொடுப்பார்கள்.

டெல்லி கேபிடல்ஸ் அணி விவரம்:

top videos

    டேவிட் வார்னர் (கேப்டன்), பிருத்வி ஷா, ரிபால் படேல், ரோவ்மன் பவல், சர்பராஸ் கான், யாஷ் துல், மிட்செல் மார்ஷ், லலித் யாதவ், அக்சர் படேல், அன்ரிச் நார்ட்ஜே, சேத்தன் சகாரியா, கமலேஷ் நாகர்கோடி, கலீல் அகமது, லுங்கி நிகிடி, முஸ்தபிசுர் ரஹ்மான், அமான் , குல்தீப் யாதவ், பிரவீன் துபே, விக்கி ஓஸ்ட்வால், இஷாந்த் ஷர்மா, ஃபில் சால்ட், முகேஷ் குமார், மணீஷ் பாண்டே, ரிலீ ரோசோவ்.

    First published:

    Tags: Delhi Capitals, IPL 2023