முகப்பு /செய்தி /விளையாட்டு / ipl 2023: விமர்சனங்களுக்கு பதிலடி.. முதல் வெற்றியை பதிவு செய்த டெல்லி கேப்பிடல்ஸ்.. வார்னர் அபாரம்

ipl 2023: விமர்சனங்களுக்கு பதிலடி.. முதல் வெற்றியை பதிவு செய்த டெல்லி கேப்பிடல்ஸ்.. வார்னர் அபாரம்

டேவிட் வார்னர்

டேவிட் வார்னர்

டெல்லி அணியை பொறுத்தவரை டேவிட் வார்னர் மட்டுமே அணியை வழிநடத்துவதாக எழுந்த விமர்சனம் நேற்று மீண்டும் உண்மையானது போல அவர் மட்டுமே அணிக்கு தேவையான பாதி ரன்களை எடுத்தார்.

  • Last Updated :
  • Delhi, India

16வது ஐபிஎல் கிரிக்கெட்  திருவிழா இந்தியாவில் நடந்து வருகிறது. போட்டிகள் நடைபெற்றது.  தொடர் தோல்வியால் துவண்டு வந்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்க்கொண்டது.  இந்தப்போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.

ஒரு போட்டில் கூட வெற்றி பெறாத டெல்லி அணி, வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கியது. முதலில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் வார்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 127 ரன்கள் மட்டுமே சேர்த்தது. தொடக்க வீரர் ஜேசன் ராய் அதிகபட்சமாக 43 ரன்களும், ஆண்ரே ரசல் 38 ரன்களும் எடுத்தனர்.

இதையும் படிக்க : ஒரே ஐபிஎல் போட்டிதான்... விராட் கோலி படைத்த புதிய சாதனைகள்..!

இதையடுத்து 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி, கேப்டன் டேவிட் வார்னரின் அதிரடி ஆட்டத்தால், சிறப்பான தொடக்கத்தை பெற்றது. 41 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து வார்னர் ஆட்டமிழந்தார். எனினும் மற்ற வீரர்கள் நிதானமாக விளையாடி அணியை வெற்றி பெறச் செய்தனர். இருபதாவது ஓவரில் 4 பந்துகள் மீதமிருந்த நிலையில் டெல்லி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இதையும் படிங்க:  அள்ளித்தந்த ஐபிஎல்.. ஒரே இரவில் கோடீஸ்வரர்களாகிய வீரர்கள்.. யார் யார் தெரியுமா..!

டெல்லி அணியை பொறுத்தவரை டேவிட் வார்னர் மட்டுமே அணியை வழிநடத்துவதாக எழுந்த விமர்சனம் நேற்று மீண்டும் உண்மையானது போல அவர் மட்டுமே அணிக்கு தேவையான பாதி ரன்களை எடுத்தார். டெல்லி அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வார்னருக்கு சரியான பாட்னர்ஷிப்பை கொடுக்காமல் இருப்பது அந்த அணிக்கு மிகவும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இன்று நடைபெறும் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது.

First published:

Tags: David Warner, Delhi Capitals, IPL 2023, Kolkata