முகப்பு /செய்தி /விளையாட்டு / பாண்டிங், கங்குலி, வாட்சன்.... தரமான பயிற்சியாளர்கள் இருந்தும் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்த டெல்லி அணி!

பாண்டிங், கங்குலி, வாட்சன்.... தரமான பயிற்சியாளர்கள் இருந்தும் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்த டெல்லி அணி!

டெல்லி அணி

டெல்லி அணி

Delhi Capitals Out of Playoff | அடுத்த இரு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் கூட பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியாது

  • Last Updated :
  • Delhi, India

பஞ்சாப் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் தோற்றதன் மூலம் டெல்லி அணி நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது.

டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 167 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக விளையாடிய அவ்வணியின் தொடக்க வீரர், பரப்சிம்ரன் சிங் 65 பந்துகளில் 103 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பின்னர் 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியில் தொடக்க வீரரும் கேப்டனுமான டேவிட் வார்னர் அதிரடி காட்டினார். 27 பந்துகளில் 54 ரன்கள் குவித்த அவர் ஆட்டமிழந்தார்.

இதையும் படிங்க: மும்பை வெற்றியால் பிளே-ஆப் வாய்ப்பு குறைந்த 5அணிகள்... சென்னை அணிக்கும் இருக்கு?..

பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் 20 ஓவர்கள் முடிவில் அவ்வணியால் 136 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. ஹர்பிரீத் பிரார் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை சாய்த்தார். இதனால் 31 ரன்கள் வித்யாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றியை தனதாக்கியது. விளையாடிய 12 போட்டிகளில் 4இல் மட்டுமே வென்றுள்ளதால் டெல்லி அணியின் ப்ளே ஆப் சுற்று கனவும் தகர்ந்தது. மொத்தம் 8 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ள டெல்லி அணி மீதமுள்ள இரு போட்டிகளிலும் வென்றால்கூட அவ்வணியால் பிளே ஆப் சுற்று செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

top videos

    டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் செயல்பட்டு வருகிறார். துணை பயிற்சியாளராக வாட்சன், அஜித் அகர்கர் செயல்பட்டு வருகிறார்கள். மேலும் ஆலோசகராக கங்குலி என இப்படி உலக தரம் வாய்ந்த பயிற்சியாளர்களை வைத்து கொண்டு டெல்லி அணி இந்த ஐபிஎல் தொடரில் படுமோசமான தோல்வியை சந்தித்து உள்ளது. முதல் 5 போட்டிகளில் தொடர் தோல்வி அடைந்த டெல்லி அணி அதன் பிறகு வெற்றி பாதைக்கு திரும்பியது. இருப்பினும் கடைசி இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்ததால் பிளே ஆப் வாய்ப்பு பறிபோனது. அது மட்டும் இல்லாமல் டெல்லி அணியில் பேட்டிங்கில் வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே நன்றாக விளையாடினர். இந்திய வீரர்கள் பிரித்வி ஷா, மாணிஷ் பாண்டே உள்ளிட்ட வீரர்கள் சோதப்பியதும் டெல்லி அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

    First published:

    Tags: Delhi Capitals, IPL 2023