முகப்பு /செய்தி /விளையாட்டு / டெல்லி கேப்பிடல்ஸ் வீரர்களின் விலை உயர்ந்த பேட்டுகள் திருட்டு...!

டெல்லி கேப்பிடல்ஸ் வீரர்களின் விலை உயர்ந்த பேட்டுகள் திருட்டு...!

டெல்லி கேப்பிடல்ஸ் கிட் பொருட்கள் திருட்டு

டெல்லி கேப்பிடல்ஸ் கிட் பொருட்கள் திருட்டு

டெல்லி கேபிடல்ஸ் கிரிக்கெட் அணி வீரர்களின் 16 விலையுயர்ந்த batகள் விமானநிலையத்தில் திருடப்பட்டதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Delhi, India

கடந்த சனிக்கிழமை பெங்களூரு அணிக்கு எதிரான போட்டி முடிந்த பிறகு டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர்கள் டெல்லிக்கு விமானத்தில் திரும்பினர். வீரர்கள் வருகைக்கு முன்பே அவர்களின் கிட் பைகள் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

அப்போது டேவிட் வார்னரின் 3 பேட்கள், மிட்சல் மார்ஷிடம் இருந்து 2 பேட்டுகள், பில் சால்டிடம் இருந்து 3 பேட்டுகள், யாஷ் தல்லின் 5 பேட்டுகள் என பேட்கள் திருடப்பட்டதாகவும், சில வீரர்களின் gloves, விலையுயர்ந்த ஷூக்களும் திருடப்பட்டதும் தெரிய வந்தது. மேலும் வெளிநாட்டு வீரர்கள் தொலைத்த மட்டைகளின் மதிப்பு ஒவ்வொன்றும் ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகம் என்ற தகவலும் கிடைத்துள்ளது.

பல வீரர்களின் பொருட்கள் திருடப்பட்டது தொடர்பாக டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகம் தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரை பெற்றுள்ள காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதையும் படிக்க : ‘மற்ற அணிகள் வீரர்களை தேடுகின்றன; தோனி வீரர்களை உருவாக்குகிறார்’ – ஆகாஷ் சோப்ரா

இந்த நிலையில், தங்களுக்கு அடுத்த போட்டிக்குள் பேட்கள் வேண்டும் என டெல்லி அணி வீரர்கள் தங்களது ஸ்பான்சர்களிடம் கேட்டுள்ளனர். மேலும் பயிற்சியின் போது தங்களின் பேட்கள் இல்லாமல், மற்ற பேட்டுகளை வைத்தே டெல்லி அணி வீரர்களும் பயிற்சி செய்து வருகிறார்கள்.

இப்படி ஒரு ஐபிஎல் அணி வீரர்களின் கிட் பொருட்கள் திருடப்பட்டது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: David Warner, Delhi Capitals, IPL 2023