முகப்பு /செய்தி /விளையாட்டு / சென்னை - ஹைதராபாத் அணிகள் இன்று பலபரிட்சை.. பலம் பலவீனங்கள் என்ன..?

சென்னை - ஹைதராபாத் அணிகள் இன்று பலபரிட்சை.. பலம் பலவீனங்கள் என்ன..?

சென்னை - ஹைதராபாத் அணிகள் மோதல்

சென்னை - ஹைதராபாத் அணிகள் மோதல்

துஷார் தேஷ்பாண்டேவும், மதீஷா பதிரானாவும் முந்தைய போட்டிகளில் நல்ல ஃபார்மை வெளிபடுத்தியது சற்று நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

  • Last Updated :
  • Chennai [Madras], India

16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இப்போட்டி, இரவு தொடங்குகிறது.

சென்னை அணியை பொறுத்தவரை, கான்வே, மொயின் அலி, தீக்சனா, மதீஷா ஆகியோரது சிறப்பான ஆட்டம் அணிக்கு பக்கபலமாக உள்ளது. அணியில் பேட்டிங் டெப்த் அதிகம் உள்ளது சென்னை அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. மேலும் காயத்தில் சில போட்டிகளில் இருந்து விலகிய பென் ஸ்டோக்ஸ் இன்றைய ஆட்டத்தில் களமிறங்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சென்னையில் ஜடேஜா, சாண்ட்னர், மொயின் அலி போன்ற ஸ்பின்னர்ஸ்கள் உள்ளது சேப்பாக்கம் மைதானத்தில் மிகவும் பலமாக இருக்கும். ஆனால் அனுபவம் இல்லாத வேகப்பந்துவீச்சாளர்கள், சென்னை அணிக்கு சற்று பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. துஷார் தேஷ்பாண்டேவும், மதீஷா பதிரானாவும் முந்தைய போட்டிகளில் நல்ல ஃபார்மை வெளிபடுத்தியது சற்று நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

ஐதராபாத் அணியை பொறுத்த வரை எய்டன் மார்க்ரம், ஹாரி புரூக், ராகுல் திருபாதி, நடராஜன் உள்ளிட்டோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தும் 5 போட்டிகளில் 2 வெற்றியை மட்டுமே பெற்றுள்ள ஹைதராபாத் அணி, 4 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடத்தில் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 போட்டிகளில் 3 வெற்றியை பெற்று 6 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றால் 8 புள்ளிகளுடன், புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறும்.

top videos
    First published:

    Tags: Chennai, CSK, IPL 2023, MS Dhoni