முகப்பு /செய்தி /விளையாட்டு / CSK Vs GT | முதல் விக்கெட்டையே கோட்டை விட்ட குஜராத் டைட்டன்ஸ்... ஆட்டத்தில் நடந்த திடீர் ட்விஸ்ட்..!

CSK Vs GT | முதல் விக்கெட்டையே கோட்டை விட்ட குஜராத் டைட்டன்ஸ்... ஆட்டத்தில் நடந்த திடீர் ட்விஸ்ட்..!

ருதுராஜ் கெய்க்வாட்

ருதுராஜ் கெய்க்வாட்

2ஆவது ஓவரின் 3ஆவது பந்தில், ருதுராஜ் கெய்க்வாட் ஷுப்மன் கில்லிடம் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

  • Last Updated :
  • Chennai [Madras], India

ஐபிஎல் குவாலிஃபையர் 1 குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங்கை தேர்வு செய்தனர். இதையடுத்து சென்னை அணி சார்பில் முதலில் ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் கான்வே ஆகியோர் களமிறங்கனர்.

இதில் குஜராத் அணி பவுலர் தர்ஷன் நல்கண்டே, 2ஆவது ஓவரை வீசினார். அப்போது அவர் வீசிய 3ஆவது பந்தில், ருத்துராஜ் கெய்க்வாட் ஷுப்மன் கில்லிடம் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். மைதானம் அமைதியானது. குஜராத் வீரர்களும் கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் உற்சாகத்தில் கொண்டாடினார்கள். முக்கிய போட்டியில், சொற்ப ரன்களில் வெளியேறவிருந்தார்.

அப்போது தான் திடீர் ட்விஸ்டாக அந்த பந்து நோ-பாலாக அறிவிக்கப்பட்டது. பந்துவீச்சாளர் தர்ஷன் நல்கண்டே, க்ரீஸை விட்டு தள்ளி காலை வைத்ததால், அந்த பந்து நோபாலாக அறிவிக்கப்பட்டது. தலை தப்பியது என ருதுராஜ் கெய்க்வாட்டும் மூச்சு விட்டார்.

இதற்கு பதிலடியாக அடுத்தடுத்த பந்துகளில் பவுண்டரிகள் அடித்து, ருதுராஜ் தனது ஆக்ரோஷமாக ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 3 ஓவர்கள் முடிவில், சென்னை அணி 23 ரன்களுக்கு விக்கெட் ஏதும் இல்லாமல் விளையாடி வருகிறது.

top videos
    First published:

    Tags: CSK, IPL 2023