முகப்பு /செய்தி /விளையாட்டு / சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ்! நாளை டிக்கெட் விற்பனை நேரம் அதிரடி மாற்றம்...

சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ்! நாளை டிக்கெட் விற்பனை நேரம் அதிரடி மாற்றம்...

மாதிரி படம்

மாதிரி படம்

CSK vs DC Ticket Sale | சென்னை அணி சேப்பாக்கத்தில் டெல்லி அணியை வரும் 10ஆம் தேதி எதிர்கொள்கிறது. இதற்கான டிக்கெட் விற்பனை நாளை தொடங்க உள்ளது.

  • Last Updated :
  • Chennai, India

சேப்பாக்கத்தில் சென்னை - டெல்லி அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனையின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நடப்பாண்டு ஐபிஎல் தொடர் இந்தியாவில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. சென்னை அணி தனது சொந்த மைதானத்தில் 7 போட்டிகளில் விளையாடுகிறது. இதில் நான்கு போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் மீதம் 2 போட்டிகள் உள்ளது. சென்னையில் நடைபெறும் போட்டிகளுக்கான டிக்கெட்டை வாங்க, நள்ளிரவு முதலே ரசிகர்கள் காத்துக்கிடந்தனர். அதுமட்டும் இல்லாமல் டிக்கெட் கிடைக்காமலும் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். டிக்கெட்கள் கள்ள சந்தையில் அதிகளவில் விற்பனை செய்து வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துவருகின்றன.

இந்த நிலையில் சென்னை- டெல்லி அணி மோதும் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 10ஆம் தேதி எதிர்கொள்கிறது. இதற்கான டிக்கெட் விற்பனை நாளை தொடங்க உள்ளது. வழக்கமான நேரத்தை விட டிக்கெட் விற்பனை நேரம் மாற்றப்பட்டுள்ளது. நாளை டிக்கெட் விற்பனை காலை 7 மணிக்கே தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தோனி மகள் ஷிவா முதல் நயன்தாரா வரை சிஎஸ்கேவுக்கு ஆதரவாக சேப்பாக்கத்தில் குவிந்த பிரபலங்கள்...

வழக்கமாக காலை 9.30மணிக்கு தொடங்கும் டிக்கெட் விற்பனை நாளை காலை 7 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத் திறனாளிகள் காலை 10.30 முதல் 11 மணி வரை ரூ.2,500 டிக்கெட்டை பெற்று கொள்ளலாம் என சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் ரூ.2,000, ரூ.2500 டிக்கெட்டுகளுக்கு மகளிருக்கென தனி வரிசைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

top videos
    First published:

    Tags: Chepauk, CSK, Delhi Capitals, IPL 2023