முகப்பு /செய்தி /விளையாட்டு / 13 வருட பகை - சேப்பாக்கத்தில் இந்த முறையாவது மும்பையை வெல்லுமா சென்னை? அனல் பறக்க காத்திருக்கும் இன்றைய மேட்ச்!

13 வருட பகை - சேப்பாக்கத்தில் இந்த முறையாவது மும்பையை வெல்லுமா சென்னை? அனல் பறக்க காத்திருக்கும் இன்றைய மேட்ச்!

எம்.எஸ்.தோனி - ரோகித் சர்மா

எம்.எஸ்.தோனி - ரோகித் சர்மா

இந்த முறையாவது மும்பை இந்தியன்ஸை வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் பழி தீர்க்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிரார்கள்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறவிருக்கும் ஐபிஎல் 49வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவிருக்கின்றன. இப்போட்டியானது இன்று மாலை 3.30 மணிக்கு துவங்குகிறது.

கடந்த 2010 ஆம் ஆண்டுக்கு பிறகு சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டிகளில் மும்பை அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் வென்றதே இல்லை. இதனால் கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்கு பிறகு இந்த முறையாவது மும்பை இந்தியன்ஸை சென்னை சூப்பர் கிங்ஸ் வெல்லுமா என சென்னை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

அதே போல இந்த சீசனில் வான்கடே மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது. இதனால் இரு அணிகளும் இன்றைய போட்டியில் வெற்றிபெற மிகக் கடுமையாக போராடும் என்பதால் சென்னை ரசிகர்களுக்கு இன்று செம ட்ரீட் காத்திருக்கிறது.

இதுவரை 10 போட்டிகளில் விளையாடிய சென்னை அணி 5ல் வெற்றிபெற்று புள்ளிபட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. அதே போல மும்பை அணி 9 போட்டிகளில் 5 வெற்றியுடன் ஆறாவது இடத்தில் உள்ளது. இருப்பினும் மும்பை இந்தியன்ஸ் அணி கடைசியாக பங்கேற்ற 7 போட்டிகளில் 5ல் வென்று வலுவான அணியாக இருக்கிறது. அதே போல சென்னை அணி கடந்த 3 போட்டிகளில் 2ல் சென்னை அணி தோல்வியடைந்திருக்கிறது. இதனால் மும்பையின் இந்த சிறப்பான ஃபார்ம் சென்னை அணிக்கு பெரும் சவாலாக இருக்கக் கூடும். குறிப்பாக மும்பை அணி கடைசியாக ராஜஸ்தான், பஞ்சாப் அணிகளுக்கு எதிராக 200 ரன்கள் என்ற இலக்கை பெற்றது.

இதையும் படிக்க |  ஐபிஎல் தொடரிலிருந்து கே.எல்.ராகுல் விலகல்..? லக்னோ அணியின் அடுத்த கேப்டன் யார்?

சென்னை அணியில் டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அஜிங்கியா ரஹானே, சிவம் டுபே, அம்பத்தி ராயுடு, மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ்.தோனி, தீபக் சாகர், மஹீஸ் தீக்ஷனா என்ற வரிசையில் வீரர்கள் களமிறங்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

top videos

    அதே போல மும்பையில் ரோகித் சர்மா, இஷான் கிஷன், கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டிம் டேவிட், நேஹல் வதேரா, பியூஸ் சாவ்லா, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஹிருத்திக் ஷோகீன், அர்ஷத் கான் ஆகியோர் களமிறங்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. சேப்பாக்கம் மைதானம் அதன் தன்மைக்கு ஏற்ப சரியாக இருந்தால் மும்பை அணி இம்பேக்ட் பிளேயராக இடது கை பந்துவீச்சாளர் குமார் கார்த்திகேயாவை பயன்படுத்தும் என தெரிகிறது.

    First published:

    Tags: CSK, IPL 2023, MI