முகப்பு /செய்தி /விளையாட்டு / இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மட்டும் வேண்டாமே! சென்னை அணி பயிற்சியாளர் பிராவோ கொடுத்த ஷாக்...

இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மட்டும் வேண்டாமே! சென்னை அணி பயிற்சியாளர் பிராவோ கொடுத்த ஷாக்...

மாதிரி படம்

மாதிரி படம்

இரண்டாவது குவாலிபையர் போட்டி நாளை அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது.

  • Last Updated :
  • Chennai, India

இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோத விரும்பவில்லை என சென்னை அணியில் பந்துவீச்சு பயிற்சியாளர் பிராவோ தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் அணியை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. மேலும் லக்னோ அணியை வீழ்த்தி மும்பை அணி குவாலிபயர் -2க்கு முன்னேறியுள்ளது. இரண்டாவது குவாலிபையர் போட்டி நாளை அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. மேலும் இறுதிப் போட்டி இதே மைதானத்தில் வரும் ஞாயிறுக்கிழமை நடைபெற உள்ளது. நாளைய போட்டியில் யார் வெற்றி பெற்று சென்னை அணியுடன் இறுதிப்போட்டியில் மோதப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எகிரியுள்ளது.

இந்நிலையில், இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வேண்டாம் என சென்னை அணியின் பவுலிங் பயிற்சியாளர் பிராவோ வேடிக்கையாக தெரிவித்துள்ளார். நேற்றைய போட்டிக்கு பின் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பேசிய பிரவோ, ’இது எனது தனிப்பட்ட ரீதியிலான உணர்வு. இறுதிப் போட்டியில் எங்களுடன் விளையாடும் அணியாக மும்பை இந்தியன்ஸ் இருக்க வேண்டாம் என நான் கருதுகிறேன்.

இதையும் படிங்க: 5 ரன்கள் 5 விக்கெட்.. இன்ஜினியர் டூ கிரிக்கெட்டர்..! -ஆகாஷ் மத்வாலின் மேஜிக் கதை

என் நண்பர் பொல்லார்ட் அதை அறிவார். இறுதிப் போட்டிக்கான ரேஸில் உள்ள அணிகளுக்கு எனது வாழ்த்துகள். நாங்கள் எதிர்கொள்ள உள்ள அந்த அணியை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளேன். அதற்கான ரேஸில் உள்ள அணிகள் தரமான மற்றும் எதிரணிக்கு அச்சுறுத்தல் தரக்கூடிய அணிகள் என்பதையும் அறிவேன் என பிராவோ தெரிவித்துள்ளார். இதை வேடிக்கையாக அவர் தெரிவித்திருந்தார்.

top videos
    First published:

    Tags: CSK, Dwayne Bravo, IPL 2023, Mumbai Indians