சிறந்த கிரிக்கெட் வீரராக செயல்பட தோனி உதவியதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் டெவோன் கான்வே புகழாரம் சூட்டியுள்ளார். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. தற்போது பாயின்ட்ஸ் டேபிளில் 3 ஆவது இடத்தில் இருக்கும் சென்னை அணி, ப்ளே ஆஃப் சுற்றுக்கு எளிதாக தகுதி பெற்று விடும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறியுள்ளனர். அணியில் இடம்பெற்றுள்ள ருதுராஜ் கெய்கவாட், ஷிவம் துபே, டெவோன் கான்வே உள்ளிட்ட வீரர்கள் திறமையாக விளையாடி வருவதால் சென்னை அணியின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
குறிப்பாக நியூசிலாந்தை சேர்ந்த பேட்ஸ்மேன் டெவோன் கான்வே இந்த தொடரில் சிறப்பாக ரன்கள் குவித்து சென்னை அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளார். அவர் தோனி குறித்து அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது- தோனியை கேப்டனாக பெற்றிருப்பது எனக்கு மிகவும் ஸ்பெஷலான விஷயமாகும். கிரிக்கெட்டில் அவர் மிகவும் அனுபவம் வாய்ந்தவர். அவர் எனக்கு ஆதரவாக இருப்பதை நான் மிகவும் சிறப்பாக உணர்கிறேன்.
நான் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராக செயல்படுவதற்கு தோனி உதவினார். அவர் மிகவும் அமைதியாக இருப்பார். எந்த நேரத்திலும் தோனி பதட்டப்பட மாட்டார். மிகவும் சுதந்திரமாக நாங்கள் விளையாட தோனி அனுமதிக்கிறார். ஒரு வீரருக்கு என்ன தேவையோ அவற்றை தோனி நிறைவேற்றித் தருகிறார். நான் அதிகமாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளேன். இப்போது டி20 போட்டிக்கு ஏற்றவாறு என்னை நான் மாற்றிக் கொண்டுள்ளேன். டி20யை பொருத்தளவில் அனைத்து பந்துகளையும் அதிரடியாக விளையாட வேண்டும் என்ற மனநிலைக்கு நான் மாறுவேன். இந்த விஷயத்தில் ரிஸ்க் அதிகமாக இருக்கும். ஆனாலும் த்ரில்லிங் அதிகம் இருப்பதால் டி20 போட்டிகளை அதிகம் விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.