முகப்பு /செய்தி /விளையாட்டு / ஐபிஎல் டிக்கெட்... சென்னையில் சிஎஸ்கே போட்டிகளை காண கட்டணம் எவ்வளவு தெரியுமா?

ஐபிஎல் டிக்கெட்... சென்னையில் சிஎஸ்கே போட்டிகளை காண கட்டணம் எவ்வளவு தெரியுமா?

சென்னை போட்டிக்கான டிக்கெட்டுகள் அறிவிப்பு

சென்னை போட்டிக்கான டிக்கெட்டுகள் அறிவிப்பு

சென்னையில் நடக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடங்குகிறது.

  • Last Updated :
  • Chennai [Madras], India

நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வருகிற 31ம் தேதி தொடங்குகிறது. குஜராத்தில் நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. ஏப்ரல் 3ம் தேதி முதல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ இடையேயான போட்டி நடைபெறுகிறது.

அதற்கான டிக்கெட் விற்பனை நாளை  காலை 9:30 மணியில் இருந்து தொடங்கப்படும் எனக் குறிப்பிட்டு,  அதன் விலை பட்டியலையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம்  அறிவித்துள்ளது. அதில்,  COUNTER-களில் மட்டுமே விற்பனை செய்யப்படும் கேலரி C/D/E Lower பிரிவு டிக்கெட்டுகள் 1,500 ரூபாயாகவும், ஆன்லைனில் மட்டுமே விற்கப்படும் கேலரி D/E Upper பிரிவு டிக்கெட்டுகள் 3000 ரூபாய் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இதையும் படிக்க :  கிரிக்கெட்டில் எனது பங்களிப்பு இருக்கும்’ -  பயிற்சியாளராகும் விருப்பத்தை தெரிவித்த ஆஸி. வீரர்

அதேபோல கேலரி I/J/K Lower பிரிவு டிக்கெட்டுகள் 2500 எனவும், கேலரி I/J/K Upper பிரிவு டிக்கெட்டுகள் இரண்டாயிரம் ரூபாய் எனவும் விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன. சென்னையில் தோனியின் ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் இருப்பதால், டிக்கெட் விற்பனை அமோகமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Chennai Super Kings, Chepauk, CSK, IPL