முகப்பு /செய்தி /விளையாட்டு / சென்னையை சூழ்ந்த மேகக் கூட்டங்கள்: மழை பெய்தால் சென்னையின் பிளேஆப் வாய்ப்பு என்னவாகும்?

சென்னையை சூழ்ந்த மேகக் கூட்டங்கள்: மழை பெய்தால் சென்னையின் பிளேஆப் வாய்ப்பு என்னவாகும்?

மாதிரி படம்

மாதிரி படம்

chennai weather report | சென்னையில் கடந்த ஒரு வாரமாக சென்னையில் விட்டு விட்டு கோடை மழை பெய்து வரும் நிலையில் இன்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருவதால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

  • Last Updated :
  • Chennai, India

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன்  காணப்படுவதால் சேப்பாக்கத்தில் நடைபெறும் மும்பை - சென்னை அணிகள் ஆட்டம் பாதிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் இவ்விரு அணிகளும் மோதவுள்ளன. சென்னை அணி கடந்த மூன்று போட்டிகளில் இரண்டில் தோல்வியை சந்தித்தது. கடைசியாக குஜராத் அணிக்கு எதிரான போட்டி மழை காரணமாக பாதியில் கைவிடப்பட்டது.

எனவே, சொந்த மைதானத்தில் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப தீவிரம் காட்டி வருகிறது. இதுவரை ஆடிய 10 ஆட்டங்களில் 5 வெற்றியுடன் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. பிளே-ஆஃப் வாய்ப்பை பிரகாசப்படுத்த இனி வரும் ஒவ்வொரு போட்டியும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதேவேளையில், மும்பை அணி 9 போட்டிகளில் 5 வெற்றியுடன் ஆறாவது இடத்தில் உள்ளது. இருந்த போதும், கடைசியாக ராஜஸ்தான், பஞ்சாப் அணிகளுக்கு எதிராக 200 ரன்கள் இலக்கை எட்டிப் பிடித்து அசத்தியது. எனவே, ஹாட்ரிக் வெற்றி முனைப்பில் மும்பை அணி உள்ளது. மேலும், சென்னை அணிக்கு எதிராக முந்தைய லீக் ஆட்டத்தில் சந்தித்த தோல்விக்கு பதிலடி கொடுக்கவும் முனைப்பு காட்டி வருகிறது.

இந்த நிலையில் சென்னையில் கடந்த ஒரு வாரமாக சென்னையில் விட்டு விட்டு கோடை மழை பெய்து வரும் நிலையில் இன்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருவதால், ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். அப்படி மழை பெய்தால் சென்னை அணியின் பிளே ஆப் வாய்ப்பு எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்.

சென்னை 10 ஆட்டங்களில் 5 வெற்றியுடன் ஒரு போட்டியில் முடிவில்லை என 11 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. லக்னோவில் நடைபெற்ற போட்டியில் சென்னை அணி 125 ரன்களுக்குள் சுருண்டியது. எளிதில் வெற்றி பெறும் என சென்னை ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், மழை குறுக்கிட்டு ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியது. இதனால் போட்டி ரத்து செய்யப்பட்டு இரண்டு அணிகளுக்கும் ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று சென்னை - மும்பை அணிகள் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் மழை குறுக்கிட்டால் முடிந்த வரை 5 ஓவர் போட்டியாவது நடைபெறும். அல்லது மழை தொடர்ந்து குறுக்கிட்டு போட்டி ரத்து செய்யப்பட்டால் கடந்த போட்டியை போல சென்னை மற்றும் மும்பை அணிக்கு  தலா ஒரு புள்ளி வழங்கப்படும். அப்படி ஒரு புள்ளி அளிக்கப்பட்டால் சென்னை அணி 11 போட்டிகள் விளையாடி 12 புள்ளிகள் கிடைக்கும். இதனால் சென்னை அணி அடுத்த வரும் மூன்று போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்படும் அப்படி வெற்றி பெற்றம் 18 புள்ளிகளுடன் பிளே ஆப் வாய்ப்பு  இருக்கும்.

இதையும் படிங்க: வங்கக்கடலில் உருவாகும் புதிய புயல்? - 10-ம் தேதி வரை வெளுத்து வாங்கப்போகும் மழை!

அதேபோல் மும்பை அணிக்கு ஒரு புள்ளி வழங்கப்பட்டால்  10 ஆட்டங்களில் 11 புள்ளிகள் கிடைக்கும். மீதமுள்ள 4  போட்டிகளில் வெற்றி பெற்றாலே 19 புள்ளிகள் பெற்று பிளே ஆப் சுற்றுக்கு நுழைய வாய்ப்பு இருக்கிறது. இதனால் இந்த போட்டி மழையால் பாதிக்ககூடாது என ரசிகர்கள் வேண்டி வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னையில் இன்று வானிலை எப்படி இருக்கபோகிறது என நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த் அளித்த பேட்டியில், சென்னையில் இன்று மழை வர வாய்ப்பு குறைவு என்றும் அம்பத்தூர், ஆவடி,திருவள்ளூர் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சேப்பாக்கத்தில் மழைக்கு குறைவான வாய்ப்பு இருப்பதாகவும் அப்படி மழை பெய்தாலும் போட்டி பாதிக்கும் அளவுக்கு மழை இருக்காது என ஸ்ரீகாந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Chepauk, CSK, IPL 2023, Mumbai Indians