முகப்பு /செய்தி /விளையாட்டு / "மதுரை சித்திரை திருவிழாவுக்கு வாங்க...” - தோனிக்கு அழைப்பு விடுத்த ரசிகர்கள்..!

"மதுரை சித்திரை திருவிழாவுக்கு வாங்க...” - தோனிக்கு அழைப்பு விடுத்த ரசிகர்கள்..!

ரசிகர்கள் ஏந்திர பதகைகள்

ரசிகர்கள் ஏந்திர பதகைகள்

Chennai Super Kings vs Sunrisers Hyderabad | மைதானத்திற்கு வந்த ரசிகர்கள் சென்னை அணி குறித்தும் கேப்டன் தல தோனி குறித்தும் பல்வேறு பதாகைகளை கண்பிடித்தனர்.

  • Last Updated :
  • Chennai, India

சென்னை அணி கேப்டன் தோனியை மதுரை சித்திரை திருவிழாவுக்கு ரசிகர் அழைக்கும் பாதகை இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று சென்னை சேப்பாகத்தில் ஐதராபாத் - சென்னை அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த 134 ரன்கள் எடுத்தது.135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சென்னை அணி 18.4 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி வெற்றி இலக்கை எட்டியது.

இந்த போட்டியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் பொன்முடி, உதயநிதி ஸ்டாலின் ,அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் பார்த்தனர். மேலும் நடிகர்கர் தனுஷ், சதீஷ், அஜித்குமார் குடும்பத்தினர் என நேற்று பிரபலங்களால் மைதானம் நிறைந்து இருந்தது. சென்னை இரண்டாவது பேட்டிங் செய்த போது விக்கெட் விழும்போது எல்லாம் தோனியை பேட்டிங் வருமாறு ரசிகர்கள் அனைவரும் கோஷம் எழுப்பினர்.

இதையும் படிங்க: அஜித் மகன் முதல் பிரியங்கா மோகன் வரை.. சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றியை மைதானத்தில் கொண்டாடிய பிரபலங்கள்!

இருப்பினும் தோனி கடைசி வரை பேட்டிங் செய்ய ரெடி ஆகாமல் இருந்ததால் மைதானத்திற்கு போட்டியை பார்த்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

நேற்று மைதானத்திற்கு வந்த ரசிகர்கள் சென்னை அணி குறித்தும் கேப்டன் தல தோனி குறித்தும் பல்வேறு பதாகைகளை கண்பிடித்தனர். அதில் ஒரு ரசிகர் தல தோனியை பார்க்க 1700 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து வந்துள்ளதாக எழுதி இருந்தார்.

top videos

    அதில் ஒரு இளைஞர் ஹாய் தோனி மதுரை சித்திரை திருவிழாவுக்கு வாருங்கள் என்ற பதாகையை கண்பித்தார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    First published:

    Tags: CSK, IPL 2023, MS Dhoni