முகப்பு /செய்தி /விளையாட்டு / ''மஞ்சள் காய்ச்சல், அரை நாள் லீவு வேணும்'' வைரலாகும் சிஎஸ்கே அணியின் ஐபிஎல் பதிவு...!

''மஞ்சள் காய்ச்சல், அரை நாள் லீவு வேணும்'' வைரலாகும் சிஎஸ்கே அணியின் ஐபிஎல் பதிவு...!

மாதிரி படம்

மாதிரி படம்

Chennai Super Kings vs Lucknow Super Giants | 4 ஆண்டுகளுக்கு பிறகு சேப்பாக்கத்தில் சென்னை அணி விளையாட உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி

  • Last Updated :
  • Chennai, India

சென்னை சேப்பாக்கத்தில் சென்னை - லக்னோ அணிகள் மோதவுள்ள நிலையில் சென்னை அணியில் ட்விட் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

6-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இந்தியாவில் கடந்த மார்ச் 31-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. தற்போது லீக் சுற்று போட்டிகள் நடந்து வருகிறது. குஜராத் அணியுடன் முதல் போட்டியில் தோல்வியைத் தழுவிய சென்னை சூப்பர் கிங்ஸ் இன்றைய போட்டியில் லக்னோ அணியை எதிர்கொள்கிறது.

இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்கவுள்ள நிலையில் சென்னை சேப்பாக்கம் பகுதியில் இன்று மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் வைத்திருப்பவர்கள் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணம் செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ஐ.பி.எல் போட்டி நடைபெறவுள்ளதால் கிரிக்கெட் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டி குறித்து சென்னை அணி பதிவிட்டுள்ள பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் மஞ்சள் காய்ச்சல் காரணமாக அரை நாள் விடுமுறை அளிக்க வேண்டும் என்று சென்னை ரசிகர்களுக்கு தேவைப்படும் என பதிவிட்டுள்ளது. இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

top videos
    First published:

    Tags: CSK, IPL 2023, LSG