முகப்பு /செய்தி /விளையாட்டு / ஆர்.சி.பி.யுடன் இன்று மோதல்… சி.எஸ்.கே. ஆடும் லெவனில் இடம்பெறும் வீரர்கள் யார்?

ஆர்.சி.பி.யுடன் இன்று மோதல்… சி.எஸ்.கே. ஆடும் லெவனில் இடம்பெறும் வீரர்கள் யார்?

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள்

கேப்டன தோனிக்கு முழங்காலில் வலி இருப்பதாக தொடக்கத்தில் தகவல்கள் வெளிவந்தன. இருப்பினும் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் தோனி சிறப்பாக விளையாடியுள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டியில் சென்னை அணியின் ஆடும் லெவனில் இடம்பெறும் வீரர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். இதுவரை இரு அணிகளும் 30 போட்டிகளில் மோதி 19 போட்டிகளில் சென்னை அணியும், 10 போட்டிகளில் பெங்களூரு அணியும் வெற்றி பெற்றுள்ளன. கடைசியாக நடைபெற்ற போட்டியில் பெங்களூரு அணி வென்றுள்ளது.

நடப்பு சீசனில் சென்னை அணி கடைசியாக ராஜஸ்தானுக்கு எதிராக விளையாடி 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த நிலையில் இன்று நடைபெறவுள்ள பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று சென்னை அணி வெற்றிப் பாதைக்கும் திரும்பும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். ஏற்கனவே முக்கிய ஆட்டக்காரரான தீபக் சாஹர் காயம் காரணமாக விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோன்று பவுலர் சிசண்டா மகளாவுவும் காயம் அடைந்துள்ளார். இதைத் தவிர்த்து கேப்டன தோனிக்கு முழங்காலில் வலி இருப்பதாக தொடக்கத்தில் தகவல்கள் வெளிவந்தன. இருப்பினும் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் தோனி சிறப்பாக விளையாடியுள்ளார்.

top videos

    சென்னை அணியின் தொடக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை அளிக்கின்றனர். இவர்களுடன் அஜிங்யா ரஹானே, அம்பதி ராயுடு, ஷிவம் துபே, ஜடேஜா ஆகியோரும் பேட்டிங்கில் பலம் சேர்த்தால் அணி நல்ல ஸ்கோரை எட்ட வாய்ப்புள்ளது. இன்றைய போட்டியில் சென்னை அணியின் ஆடும் லெவனில் பின்வரும் வீரர்கள் இடுப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. உத்தேச அணி- ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்யா ரஹானே, மொயின் அலி, அம்பதி ராயுடு, ஷிவம் துபே, ரவிந்திர ஜடேஜா, எம்.எஸ்.தோனி, டுவைன் ப்ரிடோரியஸ் அல்லது மதீஷ் பதிரனா, மஹீஷ் தீக்சனா, துஷார் தேஷ்பாண்டே.

    First published:

    Tags: IPL, IPL 2023