முகப்பு /செய்தி /விளையாட்டு / ”நான் நல்லதான் கேட்ச் பிடிச்சேன்... எனக்கு பரிசு தரலேயே...” - தோனி கலகல பேச்சு

”நான் நல்லதான் கேட்ச் பிடிச்சேன்... எனக்கு பரிசு தரலேயே...” - தோனி கலகல பேச்சு

தோனி

தோனி

MS Dhoni | எனக்கும் வயது ஆகிவிட்டது. அதனை மறுக்க முடியாது என தோனி பேசினார்

  • Last Updated :
  • Chennai, India

நான் இன்று சிறப்பான ஒரு கேட்சை பிடித்தேன். ஆனால் எனக்கு ஏன் பரிசு தரவில்லை என்று சென்னை அணி கேப்டன் தோனி நகைச்சுவையாக பேசினார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று சென்னை சேப்பாகத்தில் ஐதராபாத் - சென்னை அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த 134 ரன்கள் எடுத்தது. 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கினர். தொடக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டெவோன் கான்வே ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர்.

அணியின் ஸ்கோர் 87 ஆக இருந்தபோது 35 ரன்கள் எடுத்திருந்த ருதுராஜ் கெய்க்வாட் ரன் அவுட்டாகி வெளியேறினார். அடுத்து வந்த அஜிங்யா ரஹானே மற்றும் அம்பதி ராயுடு ஆகியோர் தலா 9 ரன்னில் ஆட்டமிழந்தனர். விக்கெட்டுகள் ஒரு பக்கம் விழுந்தாலும் தொடக்க வீரர் டெவோன் கான்வே சிறப்பாக விளையாடி 77 ரன்கள் குவித்தார். 18.4 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி வெற்றி இலக்கை எட்டியது.

இதையும் படிங்க: முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினருடன் அமர்ந்து சிஎஸ்கே வெற்றியை கொண்டாடிய அஜித் மகன் ஆத்விக் : இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

போட்டிக்கு பின்னர் பேசிய சென்னை அணி கேப்டன் தோனி, சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் முன் விளையாடுவது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. சென்னை ரசிகர்கள் எனக்கு அன்பையும் ஆதரவையும் கொடுத்திருக்கிறார்கள். போட்டி முடிந்தாலும் நான் என்ன பேசுவேன் என்று கேட்பதற்காகவே மைதானத்தில் காத்திருக்கிறார்கள் என கூறினார்.

இதையும் படிங்க: ஐபிஎல் குறித்த அத்தனை அப்டேட்களை தெரிந்துக்கொள்ள க்ளிக் செய்யுங்கள்

விக்கெட் கீப்பிங்கில் ஸ்டம்பிங் செய்வதற்கு திறமை மட்டுமே இருந்தால் போதாது. சில சமயம், சரியான இடத்தில் நாம் இருக்க வேண்டும். எப்போதுமே தயார் நிலையில் கீப்பிங் செய்ய வேண்டும். இது அனுபவம் மூலம் தான் கிடைக்கும். எனக்கும் வயது ஆகிவிட்டது. அதனை மறுக்க முடியாது என பேசிய தோனி, நான் இன்று சிறப்பான ஒரு கேட்சை பிடித்தேன். ஆனால் எனக்கு ஏன் பரிசு தரவில்லை என்று சென்னை அணி கேப்டன் தோனி நகைச்சுவையாக பேசினார்.

First published:

Tags: CSK, IPL 2023, MS Dhoni