நடப்பு ஐபிஎல்-லில் சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் அனைத்து போட்டிகளுக்கும் மெட்ரோ ரயில் இலவசம் என அறிவித்துள்ளது.
16வது ஐபிஎல் தொடர் கடந்த 31ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் மட்டும் சென்னை அணி 7 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த போட்டிகளை காண வரும் ரசிகர்களுக்காக, அணி நிர்வாகம் மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைந்து, ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரல் உள்ளிட்ட ஐந்து மெட்ரோ ரயில் நிலையங்களில் எல்.இ.டி., திரைகளில் போட்டியை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
போட்டிக்கான டிக்கெட் இல்லாதவர்கள் வடபழனி சென்ட்ரல், திருமங்கலம், விம்கோ நகர், நந்தனம் உள்ளிட்ட 5 மெட்ரோ ரயில் நிலையங்களில், பெரிய எல் இ டி திரையில் சென்னை போட்டிகளை ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்கு 10 ரூபாய் கொடுத்து, இந்த பெரிய திரையில் போட்டியை பார்ப்பதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. போட்டியை ஒரு மணி நேரத்துக்கு 10 ரூபாய் என்ற கட்டணத்தில் நேரலையாக கண்டுகளிக்கலாம்.
இதையும் படிங்க: சச்சினுக்காகவே உலகக் கோப்பை.. அந்த 20 நிமிடங்கள்..'' உணர்ச்சிக்கரமாக பேசிய தோனி!
ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் வைத்திருப்பவர்கள் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ஐ.பி.எல் போட்டி நடைபெறவுள்ளதால் கிரிக்கெட் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai metro, CSK, IPL 2023