முதல் முதலாக மகளிருக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இந்தாண்டு நடைபெற்று முடிந்துள்ளது. இதன் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்ற நிலையில், டெல்லி கேபிடல்ஸை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வென்றது. இதன் மூலம் முதல் சீசனில் கோப்பையை வென்ற அணி என்ற பெருமையை மும்பை அணி பெற்றுள்ளது.
போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது. 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்களை டெல்லி எடுத்தது. 132 ரன்கள் என்ற எளிய இலக்கை 19.3 ஓவர்களில் கடந்த மும்பை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனது.
முதல் கோப்பையை வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் இந்த வெற்றி குறித்து பெரும் மகிழ்ச்சியுடன் கருத்து தெரிவித்துள்ளார். கோப்பையை வென்ற பின் பேசிய அவர், "இது மிக சிறந்த அனுபவம். இதற்காக தான் பல ஆண்டுகள் காத்திருந்தோம். டிரெஸ்சிங் ரூம்மில் அனைவரும் மகிழ்ந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடினோம்.
இதையும் படிங்க: உலக மகளிர் குத்துச் சண்டைப் போட்டி- இன்று 2 தங்கப் பதக்கங்கள் வென்ற இந்திய வீராங்கனைகள்
இது பெரும் கனவு போல அனைவரும் உணர்கிறோம். பெண்கள் ஐபிஎல் எப்போது வரும் என அனைவரும் நீண்ட காலம் காத்திருந்தோம். இப்போது வெற்றி கோப்பை எங்களுக்கு கிடைத்தது பெரும் மகிழ்ச்சியும், பெருமையாகவும் உள்ளது. கோப்பையை வெல்வது எப்படிப்பட்ட அனுபவம் என்பதை இன்று தான் உணர்கிறேன். எப்போதும் பாசிடிவாக அனுக வேண்டும் என நாங்கள் விவாதிப்போம். அதை சரியாக செயல்படுத்தியதால் தான் இந்த இடத்தில் நின்று கொண்டு இருக்கிறோம்" என்று பேசியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Harmanpreet kaur, IPL 2023, WIPL