ஆசிய அளவில் பிரபலமான அணி என்ற பெருமையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெற்றுள்ளது.
ஆசிய அளவில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்கும் அணிகளில் அதிகளவில் மக்களிடம் சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்படும் மற்றும் பகிர்ந்து கொள்ளும் அணி அது என்ற கணக்கெடுப்பை சமூக ஊடக பகுப்பாய்வு நிறுவனமான டிபோர்ட்ஸ் & ஃபைனான்ஸ் நடத்தியது. இதில் மார்ச் மாதத்திற்கான ஆசியாவின் பிரபலமான அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் தேர்தெடுக்கப்படுள்ளது.
கடந்த மாதம் மார்ச் மாதம் சென்னை அணி குறித்து 51.2 கோடி முறை தகவல்கள் இணையத்தில் பகிரப்பட்டுள்ளன. அதற்கு அடுத்தப்படியாக போர்சுகல் அணி கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடும் சவுதி அரேபியவில் அல் நாசர் கால்பந்து அணி இரண்டாம் இடம் பிடித்துள்ளது. அந்த அணி குறித்து 50 கோடி முறை இணையத்தில் பகிரப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: பஞ்சாப் அணியை புரட்டி எடுத்த லக்னோ பேட்ஸ்மேன்கள் - ஆட்டத்தின் ஹைலைட்ஸ்
விராட் கோலியின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி(34.5 கோடியுடன் மூன்றாவது இடத்திலும் ரோஹித் சர்மாவின் மும்பை இந்தியன்ஸ் அணி 27.4கோடியுடன் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு பிரமாண்ட வரவேற்பு அளித்து வரும் நிலையில் ஆசியாவில் பிரபலமான அணியாக தற்போது சென்னை அணி ரோனால்டடோவின் அணியை பின்னுக்கு தள்ளி தோனி முதலிடம் பிடித்துள்ளதை சென்னை அணி ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.மேலும் கிறிஸ்டியானோவின் வருகைக்கு பின்னர் சவுதி லீக் மற்றும் அல்-நாஸ்ர் கிளப் அதிக கவனம் பெற்று வருகிறது என்பது குறிப்பிடதக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cristiano Ronaldo, IPL 2023, MS Dhoni