முகப்பு /செய்தி /விளையாட்டு / போராடி அவுட்டான அஸ்வின்... அப்பாவுக்காக தேம்பித் தேம்பி அழுத மகள்...!

போராடி அவுட்டான அஸ்வின்... அப்பாவுக்காக தேம்பித் தேம்பி அழுத மகள்...!

ஆட்டமிழந்த அஸ்வினை பார்த்து அழுத அவரது மகள்

ஆட்டமிழந்த அஸ்வினை பார்த்து அழுத அவரது மகள்

RCB vs RR | கடைசி ஓவரில் வெற்றிபெற 20 ரன்கள் தேவைப்பட்டபோது அஸ்வின் 3 பந்துகளுக்கு 10 ரன்கள் அடித்தார்.

  • Last Updated :
  • Bangalore, India

வெற்றிக்காக கடைசி ஓவரில் போராடி அஸ்வின் ஆட்டமிழந்ததால் அவரது மகள் கண்ணீர் சிந்தி அழும் காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று மாலை பெங்களூரு -ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி முன்னேறியது. கடைசி ஓவரில் வெற்றிபெற 20 ரன்கள் தேவைப்பட்டபோது முதல் பந்தில் பவுண்டரியும், 2 ஆவது பந்தில் 2 ரன்களும், 3 ஆவது பந்தில் இன்னொரு பவுண்டரியும் அடித்து அசத்தினார் அஷ்வின்.

இதையும் படிங்க:“Farewell கொடுக்க வந்திருக்காங்க...” - சிஎஸ்கே சீருடையில் குவிந்த கொல்கத்தா ரசிகர்கள்... ஓய்வு குறித்து தோனி மீண்டும் சூசகம்..!

top videos

    இதனையடுத்து 3 பந்தில் 10 ரன்கள் தேவை என்ற நிலையில், 4வது பந்தை தூக்கியடித்தபோது அது கேட்சாக மாற, அஸ்வின் விக்கெட்டைப் பறிகொடுத்தார். இதனால் பெங்களூரு அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெற்றிக்கு மிக அருகில் அழைத்து சென்ற தந்தை அஸ்வின் ஆவுட் ஆனதை ஏற்று கொள்ள முடியாத அஸ்வினின் மகள் கண்ணீர் விட்டு அழுதார். பின்னர் அஸ்வினின் மனைவி அவரது கண்ணீரைத் துடைத்து அவரை ஆறுதல் படுத்தினார். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    First published:

    Tags: IPL 2023, R Ashwin