முகப்பு /செய்தி /விளையாட்டு / ‘டி20 போட்டிகளில் நம்பர் ஒன் வீரர் இவர்தான்’ – வெளிநாட்டு வீரரை பாராட்டும் அனில் கும்ப்ளே

‘டி20 போட்டிகளில் நம்பர் ஒன் வீரர் இவர்தான்’ – வெளிநாட்டு வீரரை பாராட்டும் அனில் கும்ப்ளே

அனில் கும்ப்ளே

அனில் கும்ப்ளே

ஐபிஎல் தொடர் குறித்த கிரிக்கெட் பிரபலங்களின் பேட்டிகள் ஜியோ சினிமா இணைய தளத்திலும், ஆப்-யிலும் கிடைக்கின்றன.

  • Last Updated :
  • Tamil Nadu, India

டி20 போட்டிகளில் நம்பர் ஒன் வீரர் என வெளிநாட்டு வீரரை இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே பாராட்டியுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொள்கிறது. அகமதாபாத்தில் நடைபெறவுள்ள இந்த முதல் போட்டியை பிரமாண்டமாக நடத்துவதற்கு பிசிசிஐ ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்நிலையில் பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே ஐபிஎல் போட்டி குறித்து பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-

டி20 போட்டிகளில் சிறந்த வீரர்கள் பலர் இருக்கின்றனர். அவர்களில் ஒருவரை மட்டும் தேர்வு செய்வது சவாலான விஷயம். என்னைக் கேட்டால் நான் கிறிஸ் கெயிலைத்தான் சிறந்த பேட்ஸ்மேன் என்று சொல்வேன். அவரை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். பெங்களூரு அணிக்கு கிறிஸ் கெயில் செய்த பங்களிப்பை மறக்க முடியாது. ஒட்டுமொத்த பவர்ப்ளே ஓவர்களில் எதிரணியை கலங்கச் செய்து விடுவார். இவ்வாறு அவர் கூறினார்.

top videos

    முன்னதாக கிறிஸ் கெயில் தனது டி20 போட்டி அனுபவம் குறித்து சில தகவல்களை பகிர்ந்துள்ளார். ஐபிஎல் தொடர் குறித்த கிரிக்கெட் பிரபலங்களின் பேட்டிகள் ஜியோ சினிமா இணைய தளத்திலும், ஆப்-யிலும் கிடைக்கின்றன. கடந்த ஐபிஎல் மற்றும் அதற்கு முந்தைய போட்டிகள் சிலவற்றை ரசிகர்கள் ஹாட்ஸ்டார் ஆப் மூலமாக மொபைல் மற்றும் லேப்டாப்களில் பார்த்தனர். இந்த சீசனின் ஒளிபரப்பு உரிமையை ஜியோ சினிமா பெற்றுள்ளது. மேலும் நடப்பு ஐபிஎல் தொடரை எந்த கட்டணமும் இல்லாமல் 4K HD தரத்துடன் ஜியோ சினிமா தளங்களில் பார்த்து மகிழலாம். ஸ்மார்ட் டிவி, மொபைல் போனில் ஐபிஎல் தொடரை இலவசமாக பார்க்க JIO CINEMA என்ற ஆப்பை டவுண்லோட் செய்து அதன் வழியே பார்க்கலாம். லேப்டாப்பில் பார்க்க விரும்புவோர் jiocinema.com என்ற தளத்திற்கு சென்று அதன் மூலம் பார்த்து மகிழலாம்

    First published:

    Tags: IPL, IPL 2023