முகப்பு /செய்தி /விளையாட்டு / முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினருடன் அமர்ந்து சிஎஸ்கே வெற்றியை கொண்டாடிய அஜித் மகன் ஆத்விக் : இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினருடன் அமர்ந்து சிஎஸ்கே வெற்றியை கொண்டாடிய அஜித் மகன் ஆத்விக் : இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

Actor Ajithkumar Family Watch CSK Match | சேப்பாக்கத்தில் நடைபெற்ற நேற்றைய போட்டியில் நடிகர் அஜித்குமார் மகன் சிஎஸ்கே ஜேர்சியில் வெற்றியை கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

  • Last Updated :
  • Chennai, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று சென்னை சேப்பாகத்தில் ஐதராபாத் - சென்னை அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த 134 ரன்கள் எடுத்தது.135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சென்னை அணி 7விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மஞ்சள் உடையில் தனது குடும்பத்துடன் பார்த்து ரசித்தார். அதேபோல் தெலுங்கானா மற்றும் புதுவை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனும் தனது குடும்பத்தினருடன் வந்து ஐபிஎல் போட்டியை ரசித்தார். இது தொடர்பான படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பரவி வருகின்றன.

இதையும் படிங்க: என் கிரிக்கெட் வாழ்வின் கடைசிக் கட்டம்” - ஓய்வு குறித்து சூசகமாக அறிவித்த தோனி - சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்

மேலும் நடிகர் அஜித்குமார் பொதுவெளியில் வருகை தரமாட்டார் என்பது அனைவரும் அறிந்தது. ஆனால் அவர்களது குடும்பத்தினர் விளையாட்டு போட்டிகள் மற்றும் சினிமா படங்களை பார்ப்பதை ஆர்வமாக இருப்பார்கள். அந்தவகையில் சென்னையில் நடைபெற்ற ஐஎஸ்எல் கால்பந்து போட்டியை காண வந்தனர். அந்த புகைப்படம் இணையத்தில் அண்மையில் வைரலானது.

இந்த நிலையில் நேற்றைய சென்னை போட்டியில் அஜித்குமாரின் மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக், ஷாலினி சகோதரர் ரிச்சர்டு ரிஷி, அவரது சகோதிரி ஷாமிலி உள்ளிட்டோர் போட்டியை கான சேப்பாக்கம் மைதானத்திற்கு வருகை தந்தனர்.

ஷாலினி

top videos

    அதில் அஜித்குமாரின் மகன் ஆத்விக் சென்னை அணி ஜெர்சிலில் வந்த சென்னை அணி ஆதரவு தந்து வெற்றியை கொண்டாடினார். அவர்களது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

    First published:

    Tags: Ajithkumar, CSK, IPL 2023