ஐபிஎல் கிரிகெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டனஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங்க் செய்த மும்பை அணிக்கு இஷான் கிஷன் மற்றும் ரோகித் ஷர்மா ஜோடி நல்ல தொடக்கம் கொடுத்தனர். இஷான் கிஷன் 20 பந்துகளில் 31 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். ரோகித் ஷர்மா 18 பந்துகளில் 29 ரன்களை குவித்தார்.
மூன்றாவது வீரராக களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி 49 பந்துகளில் 103 ரன்களை குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதனை அடுத்து 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 218 ரன்களை சேர்த்தது. குஜராத் அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய ரஷித் கான் 4 விக்கெட்களை கைப்பற்றினார். அடுத்து 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் விருத்திமான் சாகா, சுப்மன் கில், ஹர்திப் பாண்டியா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
நிலைத்து ஆடிய டேவிட் மில்லர் 26 பந்துகளில் 41 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடி ரஷீத் கான் 32 பந்துகளில் 79 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த நிலையில் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது. இதனால் 27 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது.
இதையும் படிங்க: கர்நாடக தேர்தல் நிலவரங்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்
இதன் மூலம் புள்ளி பட்டியலில், மும்பை இந்தியன்ஸ் அணி 3வது இடத்துக்கு முன்னேறியது. இன்று மதியம் 3.30மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ஐதராபாத் லக்னோ அணிகள் பலப்பரீட்சையில் ஈடுபடுகின்றன. மாலை 7.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் டெல்லி அணி, பஞ்சாப் அணியுடன் மோதுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Gujarat Titans, IPL 2023, Mumbai Indians