முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 | ராஜஸ்தான் வெற்றிக்கு முட்டுக்கட்டை போடுமா லக்னோ... எதிர்பார்ப்பை எகிறவைக்கும் இன்றைய போட்டி..!

IPL 2023 | ராஜஸ்தான் வெற்றிக்கு முட்டுக்கட்டை போடுமா லக்னோ... எதிர்பார்ப்பை எகிறவைக்கும் இன்றைய போட்டி..!

சாம்சன் - ராகுல்

சாம்சன் - ராகுல்

Rajasthan Royals vs Lucknow Super Giants | 2023 ஐபிஎல் தொடரில் 5 போட்டிகளுக்கு பிறகு முதல் போட்டியை தனது சொந்த மைதானத்தில் ராஜஸ்தான் அணி விளையாட உள்ளது.

  • Last Updated :
  • Jaipur, India

ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் - லக்னோ அணிகள் பலப்பரீச்சை நடத்துகின்றன.

10 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் 16வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. போட்டிகள் தினம் தினம் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஜெய்ப்பூரில் இன்று இரவு 7.30 மணி நடைபெறும் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகின்றன.

இதையும் படிங்க: சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் டிக்கெட் பதுக்கல்...? கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்..!

இந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி முதன் முறையாக அதன் சொந்த மைதானத்தில் களமிறங்கவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். மேலும் ராஜஸ்தான் அணி இந்த தொடரில் 5 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே தோல்வியடைந்து 4 போட்டிகள் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ஜோஸ் பட்லர், ஜேஸ்வால், கேப்டன் சஞ்சு சாம்சன், ஹெட்மயர் என அதிரடியாக ஆடக்கூடிய அனைத்து பேட்ஸ்மேன்களுடன் ராஜஸ்தான் நல்ல நிலையில் உள்ளது. அதேபோல் அஸ்வின், சாஹல் என சுழற்பந்து வீச்சில் எதிரணியை திணறடித்து வருகின்றனர். வேகப்பந்து வீச்சில் போல்ட், சந்தீப் சர்மா என அனைத்து நிலைகளிலும் ராஜஸ்தான் அணி வலுவாக உள்ள நிலையில் சொந்த மைதானத்தில் களமிறங்குவதால் பெரும் பலம் பெற்றுள்ளது.

அதேபோல் லோகேஷ் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 3 வெற்றி 2 தோல்விகளுடன் 6 புள்ளிகளுடன்  2-வது இடத்தில் இருக்கிறது. பஞ்சாப்புக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் கடைசி ஓவரில் தோற்ற லக்னோ அணி வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டும் என கடுமையாக முயற்சித்து வருகிறது. மேலும் பலம் வாய்ந்த ராஜஸ்தான் அணியின் வெற்றிப் பயணத்துக்கு முடிவு கட்ட வேண்டும் என சில வியூகங்களை வகுத்து வருகிறது. குறிப்பாக அதிரடி விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் இந்த தொடரில் இன்னும் களமிறக்கப்படவில்லை. ஆல்ரவுண்டர் கைல் மேயர்சை நீக்கிவிட்டு டி காக்கை சேர்க்கவும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

இதையும் படிங்க: ”உங்க டீம் தகவலை கொடு” சிராஜிடம் பேரம் பேசிய சூதாட்ட கும்பல்...

top videos

    அதேபோல் கே.எல்.ராகுல் ஸ்டிரைக் ரேட் குறித்து கடுமையாக விமர்சங்கள் எழுந்த நிலையில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்து சற்று ஆறுதல் அளித்தார். தீபக் ஹோடா, குணால் பாண்டியா இருவரும் இன்னும் ஃபர்முக்கு திரும்பாதது அந்த அணிக்கு பெரும் ஏமாற்றம் அளித்து வருகிறது. அதேபோல் பூரான், மார்கஸ் ஸ்டோனிஸ் உள்ளிட்ட வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். பந்துவீச்சில் மார்க் வுட் மற்றும் ரவி பிஸ்னாய் நல்ல எக்கானமி வைத்துள்ளனர். இரு அணிகளும் வலுவாக இருப்பதால் இந்த போட்டியில்  பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பாக்கப்படுகிறது.

    First published:

    Tags: IPL 2023, LSG, Rajasthan Royals