முகப்பு /செய்தி /விளையாட்டு / ஐபிஎல் ஆட்டம் இன்று.. களமிறங்கும் மும்பை.. பரபரப்புக்கு பஞ்சமில்லாத 2 போட்டிகள்!

ஐபிஎல் ஆட்டம் இன்று.. களமிறங்கும் மும்பை.. பரபரப்புக்கு பஞ்சமில்லாத 2 போட்டிகள்!

ஐபிஎல்

ஐபிஎல்

IPL 2023 : கடந்த முறை இறுதிப் போட்டிவரை முன்னேறி கோப்பையை தவறவிட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அதே பலத்துடன் இந்தமுறையும் களமிறங்குகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் தொடரின் 3-வது நாளான இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன.

பிற்பகல் 3:30 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் கேப்டனாக நியமிக்கப்பட்ட எய்டன் மார்க்ரம் தென் ஆப்பிரிக்கா - நெதர்லாந்து இடையேயான ஒரு நாள் தொடரில் விளையாடி வருவதால், புவனேஷ்வர்குமார் அணியை வழிநடத்தவுள்ளார்.

கடந்த முறை இறுதிப் போட்டிவரை முன்னேறி கோப்பையை தவறவிட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அதே பலத்துடன் இந்தமுறையும் களமிறங்குகிறது. இரு அணிகளும் இதுவரை மோதிய 16 போட்டிகளில் ஒவ்வொன்றும் தலா 8 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதால், இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரவு 7:30 மணிக்கு நடைபெறும் 2-வது போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் மற்றும் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் பலபரீட்சை நடத்துகின்றன.

கடந்த 10 சீசன்களில் முதல் போட்டியில் தோல்வியடைந்த மும்பை அணி, இந்த ஆண்டு வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் இருப்பதாலும், பெங்களூரு அணி சொந்த மண்ணில் களமிறங்குவதாலும் இன்றைய ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது.

top videos
    First published:

    Tags: IPL 2023